அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த ஆண்டின் ஆசியாவின் சர்வதேச எழுச்சி நட்சத்திரம்(International Rising Star of the year – Asia Award) என்ற விருது வழங்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அமெரிக்க பயணம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை அரசுமுறை பயணமாக அமெரிக்க செல்கிறார். சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சிகாகோ நகரிலுள்ள முக்கிய தொழில்முனைவோர்களுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்புவிடுத்தல், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சி, சர்வதேச சமூக ஆஸ்கர் 2019 விழா மற்றும் இந்திய அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க தமிழ் தொழிலதிபர்கள் சார்பாக நடத்தப்படும் வட்டமேசை கருத்தரங்கு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். 9-ம் தேதி சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அமெரிக்க பன்முக கலச்சார கூட்டணி அமைப்பு சார்பாக நடத்தப்படும் விழாவில் சர்வதேச எழுச்சி நட்சத்திரம்- ஆசியா என்ற விருது ஓ.பன்னீர் செல்வத்துக்கு வழங்கப்படவுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த அமைப்பு சார்பாக, இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருது தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.