Home /News /tamil-nadu /

பெரியார் குறித்து பேசுபவர்கள் முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும்! ரஜினிக்கு துணை முதல்வர் அறிவுரை

பெரியார் குறித்து பேசுபவர்கள் முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும்! ரஜினிக்கு துணை முதல்வர் அறிவுரை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்ற ஓ.பன்னீர் செல்வம், ‘தன்னை போன்றவர்கள் உயரிய நிலையை அடைய பெரியாரே காரணம் என பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 43-வது புத்தக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 9-ம் தேதி தொடங்கி வைத்தார். 13 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள அரங்குகளை பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், ரஜினி கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், தன்னை போன்றவர்கள் உயரிய நிலையை அடைய, பெரியாரே காரணம் என்று கூறினார்.

பெரியார் குறித்து பேசுபவர்கள், அவரது கருத்துக்களை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டுமென, ரஜினிகாந்திற்கு அறிவுரை கூறினார். புத்தகக் கண்காட்சிக்கு தனது சொந்த நிதியிலிருந்து முதல் தவணையாக ஐந்து லட்சம் ரூபாயை கொடுக்க இருப்பதாக ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

Also see:


 
Published by:Karthick S
First published:

Tags: O Panneerselvam

அடுத்த செய்தி