ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு வந்த வில்லியே ஐஸ்வர்யா தான்.. வெளிவரும் நிஜ முகம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு வந்த வில்லியே ஐஸ்வர்யா தான்.. வெளிவரும் நிஜ முகம்!

கஸ்தூரி அத்தாச்சி மெல்ல மெல்ல ஐஸ்வர்யா மனதை மாற்றுகிறார்.

கஸ்தூரி அத்தாச்சி மெல்ல மெல்ல ஐஸ்வர்யா மனதை மாற்றுகிறார்.

கஸ்தூரி அத்தாச்சி மெல்ல மெல்ல ஐஸ்வர்யா மனதை மாற்றுகிறார்.

 • 2 minute read
 • Last Updated :

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதைகளத்தை சூடுப்பிடிக்க செய்ய இயக்குனர் ஐஸ்வர்யாவை வில்லி போல் மாற்றுவதாக தெரிகிறது.

  தொடர்ந்து கண்ணன் அவமானப்படுத்தப்படுவதால் கோபத்தில் ஐஸ்வர்யா பேசி வார்த்தை மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.குடும்பத்தில் உரிமை இல்லையா? என ஐஸ்வர்யா பேசியதை சொத்தில் வீட்டில் உரிமை இல்லையா? என்பது போல் தனம் சாவியை தூக்கி கொடுத்தது தான் இதற்கு எல்லாம் காரணம். ஆனால் கண்ணன் தனம் அண்னியை சமாதானம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். வீட்டுக்கு வந்து ஐஸ்வர்யாவையும் திட்டுகிறான். அப்போது தான் கஸ்தூரி அத்தாச்சி திரும்பவும் வீடு தேடி ஐஸ்வர்யா- கண்ணனை பார்க்க வருகிறார்.

  ஏற்கெனவே கோபத்தில் இருக்கும் கண்ணனும் ஐஸ்வர்யாவும் அத்தாச்சியை பயங்கரமாக திட்டுகிறார்கள். ஆனால் கஸ்தூரி அத்தாச்சி ஒரு முடிவில் தான் இருக்கிறார் என்பது நன்கு விளங்குகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி குடும்பத்தை பிரிப்பதற்கு தான் இப்படி கண்ணன் - ஐஸ்வர்யாவையும் தூண்டி விடுவது சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு புரிந்துவிடுகிறது. கோயிலில் அப்படி பேசியதற்கு கேவலமான காரணத்தையும் கஸ்தூரி அத்தாச்சி சொல்ல கண்ணனும் ஐஸ்வர்யாவும் அதை ஏற்றுகொள்கிறார்கள். திரும்பவும் கண்ணனை அவர்களின் அண்ணன்களுடன் சேர்த்து வைப்பதாக மற்றொரு திட்டத்தையும் கஸ்தூரி அத்தாச்சி சொல்கிறார். அது என்னவென்றால் மூர்த்தியின் வீட்டுக்கு எதிரிலே வேறொரு வீட்டுக்கு கண்ணன் குடி வருவது. இதை முதலில் கேட்டதும் கண்ணன் வானதுக்கும் பூமிக்கும் குதிக்கிறான். இனிமேல் இதுப்பற்றி பேச வேண்டாம் எனவும் எச்சரிக்கிறான். ஆனால் கஸ்தூரி அத்தாச்சி மெல்ல மெல்ல ஐஸ்வர்யா மனதை மாற்றுகிறார். ஐஸ்வர்யாவுக்கும் அந்த முடிவில் இஷ்டம் போல தான் தெரிகிறது.

  இந்த பக்கம் மூர்த்தி ஐஸ்வர்யா பற்றி ஜீவாவிடம் விசாரிக்கிறார். அப்படியே குடோன் இருக்கும் இடத்தில் சொந்தமாக கடை கட்டவும் அண்ணன் - தம்பிகள் முடிவு எடுக்கின்றனர். இது இப்படி இருக்க மீண்டும் ஐஸ்வர்யாவை தேடி வருகிறார் கஸ்தூரி அத்தாச்சி. இவர்களை விடுவதாக இல்லை போல. இந்த முறை கஸ்தூரி அத்தாச்சி வந்த காரியம் வெற்றி அடைகிறது. ஆரம்பத்தில் ஐஸ்வர்யா திட்டினாலும் சித்தி சொன்னா நல்லது இருக்கும் என நம்ப தொடங்குகிறாள். அதுமட்டுமில்லை புது வீட்டுக்கு அட்வான்ஸ், மாத வாடகை தருவதாகவும் கஸ்தூரி அத்தாச்சி சொல்கிறாள். செருப்பால் அடித்து துரத்தியவர் ஏன்? இப்படி தேடி தேடி வந்து நல்லது செய்கிறார் என்பதை கண்ணனும் ஐஸ்வர்யாவும் யோசிக்க மறுக்கின்றனர். ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டாக பிரிந்தால் அதற்கு காரணம் ஐஸ்வர்யா தான் இருப்பார் போல.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: