ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடித்து துரத்தப்படும் ஐஸ்வர்யா.. இரண்டாக பிரிய போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

அடித்து துரத்தப்படும் ஐஸ்வர்யா.. இரண்டாக பிரிய போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் லட்சுமி அம்மாவின் மறைவுக்கு பிறகு இரண்டாக பிரிந்து விடும் என்பது போல் கதை செல்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் லட்சுமி அம்மாவின் மறைவுக்கு பிறகு இரண்டாக பிரிந்து விடும் என்பது போல் கதை செல்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் லட்சுமி அம்மாவின் மறைவுக்கு பிறகு இரண்டாக பிரிந்து விடும் என்பது போல் கதை செல்கிறது.

  • 2 minute read
  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று இறந்து போன லட்சுமி அம்மாவை பார்க்க வந்த ஐஸ்வர்யா ரோட்டில் வைத்து அடித்து துரத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் முழுவதும் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சோகங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத நேரத்தில் லட்சுமி அம்மா இறந்து விட மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் இடி விழுந்தது போல் உள்ளனர். அவரை அடக்கம் செய்ய அடுத்தடுத்த முடிவுகள் எடுக்கப்பட, கண்ணனுக்கு இன்னும் தகவல் சொல்லப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பரபரப்பாக சீரியலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய எபிசோடில் லட்சுமி அம்மாவை பார்க்க மூர்த்தி வீட்டுக்கு வரும் ஐஸ்வர்யாவை முல்லை அம்மா அடித்து துரத்துகிறார்.

நேற்றே லட்சுமி அம்மாவின் தம்பிக்கு தகவல் சொல்ல இருவரும் இன்று வீடு வந்து சேர்ந்தனர். அக்காவை பார்த்து தம்பி தேம்பி அழ, மொத்த குடும்பமும் கண்ணீரில் தத்தளிக்கிறது. சம்மந்தி வீட்டுக்கு முறைப்படி சொல்ல வேண்டும் என்பதால் தனத்தின் அண்ணா, சுந்தரமுக்கு ஃபோன் செய்கிறார். அதற்குள் கண்ணனின் ஃபோனை தேடி ஐஸ்வர்யா சீக்கிரமாகவே கடைக்கு போகிறார். விஷயத்தை சுந்தரம் கேள்விப்பட்டதும் உடனே ஐஸ்வர்யாவுக்கும் தகவல் சொல்கிறார். அப்படியே கண்ணிடமும் தகவல் சொல்லும்படி கூறுகிறார். ஆனால் கண்ணனிடம் ஃபோன் இல்லை என்ற விஷயத்தை ஐஸ்வர்யா சொல்ல, கோபத்தில் கண்ணனை திட்டியவர், தான் எப்படியாவது தகவல் சொல்லிவிடுவதாக கூறி ஐஸ்வர்யாவை கடையில் இருந்து கிளம்ப சொல்கிறார். அன்றைய தினம் கடைக்கு லீவு விடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஷயத்தை கேட்டு கதறி அழுத ஐஸ்வர்யா, வேக வேகமாக வீட்டுக்கு போய்  ஃபோனில் சார்ஜ் போடுகிறார். பயத்தில் கதறி கதறி அழுகிறார். குற்ற உணர்ச்சி அவரை ஏதோ ஏதோ பேச வைக்க, கண்ணனிடம் எப்படியாவது விஷயத்தை சொல்ல வேண்டும் என துடிக்கிறார். தேம்பி தேம்பி அழுதவர் ஒரு கட்டத்தில் மயங்கி அங்கேயே விழுகிறார். அந்த நேரம் பார்த்து ஃபோன் அடிக்கிறது. ஆனால் அதை எடுக்க முடியாமல் ஐஸ்வர்யா மயக்கத்தில் கிடக்கிறார். ஒருவேளை அது கண்ணனாக கூட இருக்கலாம். இந்த பக்கம் லாரியில் கண்ணன் திருச்சி சென்று கொண்டிருக்கிறான்.

வீட்டுக்கு வரும் சுந்தரம் மீனா ஜீவாவுக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்கிறார். சடங்குக்கு தேவையான வேலையை செய்வோம் என்று தனத்தோட அண்ணனிடம் பேசிவிட்டு கண்ணனையும் திட்டுகிறார். அவர் மட்டுமில்லை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், லட்சுமி அம்மாவின் நாத்தனார் எல்லோரும் கண்ணன் ஓடி போய் திருமணம் செய்தததால் தான் லட்சுமி அம்மா இறந்துவிட்டார் என பேசுகின்றனர். அதனால் மூர்த்திக்கு ஒருபக்கம் கண்ணன் மீது கோபம் தலைக்கு ஏறுகிறது. அப்படியே மல்லிகாவுக்கு தகவல் சொல்லப்படுகிறது.

வீட்டில் இருக்க முடியாத ஐஸ்வர்யா அழுதப்படியே மூர்த்தி வீட்டுக்கு வர எல்லோரும் அவரை திட்டி தீர்க்கின்றனர். ஒருபடியாக முல்லையின் அம்மா ஐஸ்வர்யாவை அடித்து கீழே தள்ளிவிடுகிறார். ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ண ராசி தான் லட்சுமி அம்மாவுக்கு இப்படி நடந்ததாகவும் ஊர் முன்னாடி பேசி அவமானப்படுத்துகிறார். ஒருமுறை கடைசியாக லட்சுமி அம்மாவை பார்க்க வேண்டும் என்று காலில் விழுந்து கெஞ்சிகிறார் ஐஸ்வர்யா. ஆனால் மீனா உட்பட யாருமே அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் ஓரமாக நின்று அழுகிறார். ஒருவேளை கண்ணன் விஷயம் தெரிந்து வந்தாலும் அவரையும் யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிகிறது. அதுமட்டுமில்லை கண்ணனை இனி மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிகிறது. மொத்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் லட்சுமி அம்மாவின் மறைவுக்கு பிறகு இரண்டாக பிரிந்து விடும் என்பது போல் கதை செல்கிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: