ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மீனாவுக்கு வந்த அடுத்த சோதனை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இனி எல்லாமே ஐஸ்வர்யா தான்!

மீனாவுக்கு வந்த அடுத்த சோதனை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இனி எல்லாமே ஐஸ்வர்யா தான்!

ஐஸ்வர்யாவுக்கும் மீனாவுக்கும் இடையில் அடுத்தடுத்து அரங்கேற போகும் சண்டைகள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த 1 வாரத்திற்கான எபிசோடு.

ஐஸ்வர்யாவுக்கும் மீனாவுக்கும் இடையில் அடுத்தடுத்து அரங்கேற போகும் சண்டைகள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த 1 வாரத்திற்கான எபிசோடு.

ஐஸ்வர்யாவுக்கும் மீனாவுக்கும் இடையில் அடுத்தடுத்து அரங்கேற போகும் சண்டைகள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த 1 வாரத்திற்கான எபிசோடு.

  • 2 minute read
  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குட்டி அண்ணி மீனாவுக்கு, ஐஸ்வர்யாவால் அடுத்தடுத்த பிரச்சனைகள் தலை தூக்க வீட்டில் யாருக்கு முதலிடம் என்ற பேச்சும் அடிப்பட தொடங்கி விட்டது.

அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சிரியலுக்கு மக்கள் ம்த்தியில் நல்ல வரவேர்பு உண்டு. இந்த சீரியலில் நடிக்கும் தனம் அண்ணி, மீனா, கண்ணன் போன்றவர்களுக்கு சமூகவலைத்தளங்களிலும் ஏகப்பட்ட ஃபேன்ஸ். இதனால் சீரியலிலும் இவர்களை அதிகம் அடிப்படையாக கொண்டே சீரியல் கதையும் செல்லும். கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு சீரியலில் அதிக கவனம் கண்ணனுக்கு கொடுக்கப்பட்டது. 1 மாதத்துக்கு மேலாக இவர்கள் திருமணத்தை வைத்தே இயக்குனர் சீரியலை தள்ளினார்.

அடுத்தது லட்சுமி அம்மா மறைவு. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் டி.ஆர்.பி டாப்பில் உயர்ந்தது. இவ்வளவு நாளாக கண்ணன் - ஐஸ்வர்யாவை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒதுக்கி வைத்திருந்தது. ஆனால் இப்போது திரைக்கதையில் திடீர் மாற்றமாக தனம் அண்ணி இவர்களை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். இதனால் சீரியல் மீண்டும் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லை, மீனா - ஐஸ்வர்யா இருவரும் தொடர்ந்து சண்டையிட்டு கொள்வது போலவே கதை நகர்ந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டின் மருமகளான மீனா, வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக இருப்பது போல் தான் அவரின் கதாபாத்திரம். ஆனால் கடைசி மருமகளான ஐஸ்வர்யா வந்த முதல் நாளே எல்லா வேலையும் இழுத்து போட்டு கொண்டு செய்து எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குகிறார். அதிலும் குறிப்பாக தனம், ஐஸ்வர்யவை பார்த்து தனமார பாராட்டுகிறார்.

மொத்த குடும்பத்திற்கும் சமைப்பது, எல்லா வேலையும் செய்வது என ஐஸ்வர்யாவின் கடமை உணர்ச்சி எல்லை மீற, மீனா இதனால் கடுப்பாகிறது. அதுமட்டுமில்லை ஐஸ்வர்யாவை வைத்து மீனாவை கிண்டல் செய்வதும் இன்றைய எபிசோடில் தொடர்கிறது. இதை சற்றும் விரும்பாத மீனா கடுப்பில் முகத்தை சுளிக்கிறார்.

Must Read : பிரியங்கா இடத்தில் சிவாங்கி? விஜய் டிவி எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

ஐஸ்வர்யா வந்த முதல் நாளே மீனாவுக்கு தலைவலி தொடங்கி விட்டதால் இதுப் பற்றி முல்லையிடம் மீனா புரம் பேசுகிறார். ஐஸ்வர்யாவுக்கும் மீனாவுக்கும் இடையில் அடுத்தடுத்து அரங்கேற போகும் சண்டைகள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த 1 வாரத்திற்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: