ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Pandian Stores | பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது வில்லி.. வேற யாரு ஐஸ்வர்யா தான்!

Pandian Stores | பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது வில்லி.. வேற யாரு ஐஸ்வர்யா தான்!

. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லி பாத்திரம் இல்லை என்பதால் ஐஸ்வர்யாவை வைத்து தான் இயக்குனர் கொஞ்ச நாள் சீரியலை இப்படி ஓட்டுவார்

. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லி பாத்திரம் இல்லை என்பதால் ஐஸ்வர்யாவை வைத்து தான் இயக்குனர் கொஞ்ச நாள் சீரியலை இப்படி ஓட்டுவார்

. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லி பாத்திரம் இல்லை என்பதால் ஐஸ்வர்யாவை வைத்து தான் இயக்குனர் கொஞ்ச நாள் சீரியலை இப்படி ஓட்டுவார்

 • 2 minute read
 • Last Updated :

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரை வில்லி கதாபாத்திரம் காலியாகவே இருந்த நிலையில் அந்த இடத்தை ஐஸ்வர்யா கொண்டு நிரப்ப சீரியல் குழு முடிவு செய்துள்ளது போல. சீரியலில் அடுத்தடுத்து அரங்கேறு திருப்பங்களை பார்த்து ரசிகர்களுக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இத்தனை எபிசோடுகளை கடந்து மிகப் பெரிய வெற்றி பயணத்தில் செல்ல மிக முக்கியமான காரணம், இந்த சீரியல் மற்ற எல்லா சீரியலில் இருந்து வேறுபட்டு நிற்பது தான். சீரியல் என்றாலே மாமியார் மருமகள் சண்டை, வில்லி, பழிவாங்குவது என பழைய பாட்டை பாடாமல் வில்லன், வில்லி எதுவும் இல்லாமல் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகளை தாண்டி எப்படி கூட்டு குடும்பமாக சேர்ந்து வாழ்கிறார்கள் இப்படி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்று வரை  சென்று கொண்டிருக்கிரது.

  Also Read : அவமானங்கள் பெற்று தந்த வெகுமதி.. ட்ரெண்டிங்கில் விஜய் டிவி அறந்தாங்கி நிஷா - என்ன காரணம்?

  இந்நிலையில், கண்ணன் - ஐஸ்வர்யா கல்யாண பிரச்சனைக்கு தீர்வு கட்டிய இயக்குனர் அடுத்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். நேற்றைய எபிசோடில் மூர்த்தியை மீறி, தனம் அண்னி கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் வீட்டுக்கு அழைத்து வருகிறார். இதனால் மூர்த்தி கோபித்து கொண்டு வீட்டை விட்டு போகிறார். தனம், மீனா, கண்ணன் உப்டட எல்லோரும் கோபத்தில் தான் மூர்த்தி கிளம்பினார் என் நினைத்தனர். ஆனால் உண்மை அப்படியில்லை மூர்த்திக்கு இந்த விஷயத்தில் தனம் மீதோ கண்ணன் மீதோ எந்த கோபமும் இல்லை. இதை ஜீவா இன்றை எபிசோடில் தெரிந்து கொள்கிறார்.

  அப்படி என்றால் மூர்த்தியும் கண்ணனை ஏற்றுக் கொண்டார் என அர்த்தம் ஆகுகிறது. ஆனால் அதையும் தாண்டி இப்போது அடுத்த பிரச்சனை வருகிறது. கடைசி மருமகள் ஐஸ்வர்யா முகத்திற்கு நேராக பேசும் குணம் கொண்டர், மீனா, முல்லைக்கு ஐஸ்வர்யா மீது அவ்வளவு நல்ல எண்ணமும் இல்லை. இதனால் அடிக்கடி ஐஸ்வர்யா துடுக்காக பேசுவதையெல்லாம் மீனாவும் முல்லையும் தப்பாக புரிந்து கொண்டு சண்டைக்கு வருகிறார்கள்.

  ' isDesktop="true" id="640309" youtubeid="5hB08egPqgY" category="tamil-nadu">

  பதிலுக்கு ஐஸ்வர்யாவும் விட்டு கொடுக்காமல் சண்டைக்கு செல்கிறார். இதனால் வீட்டில் சண்டை அதிகம் ஏற்படுகிறது . அதிலும் மீனாவுக்கு ஐஸ்வர்யாவுக்கு சுத்தமாக செட் ஆகாததால் சமையல் அறையில் ஒரே அடி தடி. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லி பாத்திரம் இல்லை என்பதால் ஐஸ்வர்யாவை வைத்து தான் இயக்குனர் கொஞ்ச நாள் சீரியலை இப்படி ஓட்டுவார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் இன்றய சிரியல் எபிசோடும் அமைந்து இருக்கிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: