பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் - வைரலாகும் வீடியோ
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் - வைரலாகும் வீடியோ
பிரதமர் வீடு திட்டத்தின் கீழ் ஆணை வழங்க லஞ்சம்
திருவண்ணாமலை மாவட்டம், அத்திமலைப்பட்டு கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2019-2020ம் ஆண்டு 22 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 2,70,000 ரூபாய் நிதி ஒதுக்கபட்டன.
ஆரணி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆணை வழங்க பயனாளிகளிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலாளர் பணம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், அத்திமலைப்பட்டு கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2019-2020ம் ஆண்டு 22 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 2,70,000 ரூபாய் நிதி ஒதுக்கபட்டன. 2 ஆண்டுகளை கடந்தும் இந்த தொகை பலருக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விசாரித்த போது, அத்திமலைபட்டு ஊராட்சி நிர்வாகம் பணியை ரத்து செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனிடையே, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆணை வழங்க பயனாளிகளிடம் தலா 30,000 ரூபாய் லஞ்சமாக அளிக்க வேண்டும் என்று அத்திமலைபட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் மற்றும் செயலாளர் ரமேஷ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
முதற்கட்டமாக ஒரு பயனாளியிடம் 6,000 ரூபாய் கையூட்டும் பெற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்தியாளர் : மோகன்ராஜ் (ஆரணி)
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.