Home /News /tamil-nadu /

அலுவலர்களே முடிவெடுக்கிறார்கள்... எங்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கிடுக... தமிழக அரசுக்கு ஊராட்சித் தலைவர்கள் கோரிக்கை

அலுவலர்களே முடிவெடுக்கிறார்கள்... எங்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கிடுக... தமிழக அரசுக்கு ஊராட்சித் தலைவர்கள் கோரிக்கை


 ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டம்

ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டம்

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை வள்ளுவர்க்கோட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஊராட்சிகள் தனி அலுவலர் கட்டுப்பாட்டில் இருந்தது போன்ற சூழல்தான் தற்போதும் உள்ளதாகவும், அதிகாரிகளே எல்லா முடிவும் எடுப்பதால், ஊதியமற்ற, அதிகாரமற்றவர்களாக உள்ளதாகவும், ஊராட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

    இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகளையும், அதிகாரிகளின் தலையீடு மற்றும் உரிமை மறுப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டி, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம். முனியாண்டி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கோரிக்கைகள்:

     
    கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகளே தீர்மானங்களை எழுதி, அதை நிறைவேற்றி கையெழுத்து பெற நிர்பந்திக்கின்றனர். 2016 -2019 கால கட்டத்தில் சிறப்பு தனி அலுவலர் கட்டுப்பாட்டில் இருந்தது போல், தற்போதும் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இந்நிலை போக்க அரசு தலையிட்டு ஊராட்சி தலைவர்கள் சுதந்தரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    நிலுவையில் உள்ள மானியங்க்ஜளை முழுமையாக வழங்கிட வேண்டும்.
    அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2 க்கான டெண்டரை அந்தந்த ஊராட்சிகளிலேயே நடத்த வேண்டும்.
    ஊராட்சி கணக்கில் உள்ள உபரி நிதியை அரசு கேட்பது ஏற்புடையதல்ல.
    100 நாள் பணி திட்டத்திற்கான பணியாணைகளை ஊராட்சி மன்ற தலைவர்களே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஊராட்சித் தலைவர்களுக்கு செயல் அலுவலர் தகுதிக்கான மாத ஊதியம் ₹30000 ம், ஓய்வூதியமாக ₹10000 ம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஊராட்சி செயலர் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கோள்ள ஊராட்சி தலைவர்களே எடுக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
    ஊராட்சி பொதுநிதிக்கு வழங்கப்படும் நிதியை தற்போதைய 2021 மக்கள் தொகை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஊராட்சியில் தெருவிளக்கு,மோட்டார் பராமரிப்பு பணிகளுக்கு 1995 ல் நிர்ணயிக்கப்பட்ட விலை படியே இன்றும் நீடிக்கிறது. தற்போதைய விலைவாசிபடி, 10 மடங்கு உயர்த்தி நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஊராட்சி டெண்டர்களுக்கு ஓர்க் ஆர்டரும், பில் பாஸ் ஆர்டரும் தலைவர்களே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஏற்கெனவே உள்ளதுபோல் ஆண்டுக்கு 4 முறை கிராம சபை நடத்திட அரசு வழி வகை செய்திட வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai, Protest

    அடுத்த செய்தி