முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொள்ளாச்சியில் ரூ.1,50,000 மதிப்பிலான புகையிலை பான்மசாலா பொருட்கள் பறிமுதல்!

பொள்ளாச்சியில் ரூ.1,50,000 மதிப்பிலான புகையிலை பான்மசாலா பொருட்கள் பறிமுதல்!

பான் மசாலா, புகையிலை ஆகியவை பறிமுதல்.

பான் மசாலா, புகையிலை ஆகியவை பறிமுதல்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,50,000 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மளிகைக் கடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோட்டூர் சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அழகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் கோட்டூர் சாலையில் மளிகைக் கடை நடத்தி வரும் சுப்பிரமணியம் என்பவரது வீட்டை சோதனையிட்டனர்.

அப்போது அட்டைப் பெட்டிகளில் புகையிலை மற்றும் பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த ரூ.1,50,000 மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கூறிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சில மளிகைக் கடைகளில் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. முதல்முறையாக தற்போது இங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வந்த நான்கு கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Gutka Pan masala Seized, Pollachi