ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குப்பை மேடாக மாறிய பல்லாவரம் பெரிய ஏரி விரைவில் படகு இல்லமாக மாற்றம்

குப்பை மேடாக மாறிய பல்லாவரம் பெரிய ஏரி விரைவில் படகு இல்லமாக மாற்றம்

குப்பை மேடாக மாறிய பல்லாவரம் பெரிய ஏரி.

குப்பை மேடாக மாறிய பல்லாவரம் பெரிய ஏரி.

குப்பை மேடாக மாறிய பல்லாவரம் பெரிய ஏரி விரைவில் படகு இல்லமாக மாறவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பல்லாவரம் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய பல்லாவரம் பெரிய ஏரி, பல்லாவரம் - துறைப்பாக்கம் சாலை அமைக்கும்போது இரண்டாக பிரிக்கப்பட்டது. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இந்த ஏரியின் ஒரு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பல்லாவரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மலைபோல் தேக்கி வைக்கப்பட்டிருந்தன. மனித பயன்பாட்டின் கழிவுகளால் ஏரி இருந்த தடம் தெரியாமல் அழிவின் விழும்பிற்குச் சென்றுவிட்டது.

  இந்நிலையில், கடந்த 2018ம் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்பாயமானது ஏரியில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றுமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ரூ.7 கோடி மதிப்பீட்டில் ’ஜிக்மா குளோபல் என்விரான் சொலுசன்’ (Zigma Global Environ Solutions) என்னும் தனியார் நிறுவனத்தின் மூலம்  உயிரியல் அகழாய்வு முறையில், ஏரியில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணி நவீன இயந்திரங்களின் உதவியுடன் துரிதமாக நடைபெற்றுவருகிறது.

  குப்பையை அகற்ற பயன்படுத்தப்படும் இந்த இயந்திரங்கள் குப்பையில் கலந்திருக்கும் பிளாஸ்டிக், இரும்பு, மண், ரப்பர், மண், ஜல்லி போன்ற கழிவுகளை தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்கிறது. இப்படி பிரிக்கப்படும் குப்பையிலிருந்து கிடைக்கும் பாட்டில், ரப்பர் போன்ற மறு பயன்பாட்டிற்குப் பயன்படும் கழிவுகள் முதலானவை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.

  Also read: காவிரி பாசன மாவட்டங்களில் ஊரக வேலை நாட்களை 200ஆக உயர்த்த வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

  அதேபோல் தேவையில்லாத பிளாஸ்டிக் கழிவுகள் தார் சாலை அமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், குப்பையிலிருந்து தனியாக பிரித்தெடுக்கப்படும் மண், ஜல்லி கற்கள் போன்றவை சாலையில் ஏற்படும் பல்லங்களை நிரப்ப பயன்படுத்தப்படுகின்றன. கிட்டதட்ட 8 மாதங்களாக நடைபெற்றுவரும் இந்தப் பணி மூலம் இதுவரை 70,000 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

  இந்த ஆண்டு இறுதிக்குள் கழிவுகள் அகற்றும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு ஏரியை ஆழப்படுத்தி புனரமைத்து படகு இல்லம், பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மெல்ல மெல்ல மீண்டும் புத்துயிர் பெற்றுவரும் பல்லாவரம் பெரிய ஏரியில் படகு சவாரி செய்ய மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

  Published by:Rizwan
  First published:

  Tags: Pallavaram