பழவேற்காடு மீனவர்களின் போராட்டம் நான்காவது நாளாக தொடரும் நிலையிலி, படகுகளில் கறுப்புக் கொடி கட்டி கடல் மார்க்கமாக எல்அன்டி (L&T) தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவரும் நிலையில் அங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் காட்டுப்பள்ளி எல்அன்டி தனியார் துறைமுகத்தை கப்பல்கள் நுழையும் பகுதியில் 40க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று கடலில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவப் பெண்கள் குடும்ப அட்டை ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை கையில் ஏந்தியவாறு பழவேற்காடு பஜார் பகுதியில், தனியார் நிறுவனம் தமிழக அரசிடம் உறுதியளித்த 1500 வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இதற்கு அரசு உரிய முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், படகுகளில் சென்று எல்அன்டி மற்றும் அதானி தனியார் துறைமுகங்களுக்கு மீனவர்கள் நுழையாதவாறு 4 கப்பல்களை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். பழவேற்காடு பஜார் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மீனவ பெண்கள் மற்றும் மீனவர் சங்க கூட்டமைப்பினருடன் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Must Read : வணக்கம் மோடி வாங்க மோடி..! - பாஜக ஏற்பாடு செய்த பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை

நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணி
கடலிலும், கரையிலும் என மீனவர்கள் இருமுனை பேராட்டத்தை நடத்திவரும் நிலையில், காட்டு பள்ளி துறைமுகம் பழவேற்காடு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - பார்த்தசாரதி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.