PALAVARAM FEMALE CANDIDATE RAISED COMPLAINT ABOUT WHO SENT THE PORN VIDEOS TO HER MOBILE NUMBER TO THE CYBER CRIME POLICE VAI
ஆபாச வீடியோக்கள் அனுப்பிய நபர்... கொந்தளித்த பெண் வேட்பாளர்..
சென்னை பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் வீரலட்சுமி, தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபர்கள் குறித்து போலீசில் புகாரளித்துள்ளார். 3 நாட்களில் போலீசார் பிடிக்காவிட்டால் தானே பிடித்து அந்த நபரது ஆணுறுப்பை அறுக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் ராமாபுரம், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 35 வயதான வீரலட்சுமி. இவர் தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பின் நிறுவனர் தலைவராக உள்ளார். மை இந்தியா கட்சி சார்பில், பல்லாவரம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். கடந்த 17ம் தேதி வீரலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு அவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆபாசப் புகைப்படம் வந்துள்ளது. தொடர்ந்து அருவருக்கத் தக்க வகையில் ஆபாச வீடியோக்களும் வரத் தொடங்கின. அதிர்ச்சியடைந்த வீரலட்சுமி, உடனடியாக இதுகுறித்து பரங்கிமலை துணை கமிஷனரிடம் புகார் அளித்தார்.
ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ள மர்ம நபர்களை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளார். அதோடு நிற்காமல், 3 நாட்களில் அந்த மர்ம நபர்களைப் போலீசார் கண்டுபிடிக்காவிட்டால், தானே அவர்களைப் பிடித்து அவர்களின் ஆணுறுப்பை அறுக்கப் போவதாகவும் எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார்.