அதிமுக அரசு வட்டி கட்டுவதற்கும் கடன் வாங்கியிருக்கிறது - பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

கடன் வாங்கி கடன் வாங்கி, அந்த கடனுக்கான வட்டி கட்டுவதற்கு கடன் வாங்கி, அந்த வட்டிக்கு வட்டி கட்டுவதற்கு கடன் வாங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    அதிமுக அரசு வட்டி கட்டவே கடன் வாங்கியிருக்கிறது என வெள்ளை அறிக்கை வெளியிட்டுப் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

    இது குறித்து நிதியமைச்சர் கூறுகையில், “கடன் வாங்கிய தொகை ஒரு ரூபாயாக இருந்தால், ஒரு ரூபாயை முதலீடு செய்ய வேண்டும் என்பது சட்டம். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசு கடன் வாங்கிய ஒரு ரூபாயில், 50 பைசாவை மட்டுமே முதலீடு செய்திருப்பதாக அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

    இப்படித்தான் கடன் வாங்கி கடன் வாங்கி, அந்த கடனுக்கான வட்டி கட்டுவதற்கு கடன் வாங்கி, அந்த வட்டிக்கு வட்டி கட்டுவதற்கு கடன் வாங்குகிற நிலையில் அதிமுக அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது. இது நிச்சயம் அரசியல் மேலாண்மை தவறு.

    அரசின் மேலாண்மை தவறு காரணமாக, வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடக்கிறது. இதனால் தற்போதைய தமிழக மக்கள் தொகையின் கணக்குபடி, ஒவ்வொரு குடும்பத்தின் தலைமீதும் ரூ.50,000 முறைகேடு தொகையாக போய் விழுகிறது. தமிழக அரசுக்குச் சொந்தமான விவசாய நிலம் 29 லட்சம் ஹெக்டேர். இதில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தின் அளவு சுமார் 2.05 லட்சம் ஹெக்டேர்.

    பெரும்பாலான இடங்களில், பெரும்பாலான துறைகளில் அரசின் ஒத்துழைப்புடன் ஊழல் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை நிச்சயமாக சரி செய்தாக வேண்டும். விரைந்து செய்ய வேண்டியது எங்கள் கடமை.

    பல ஆண்டுகளாக, சொத்து வரியை அதிகரிக்கவே இல்லை. இது மிகவும் தவறானது, இது பணக்காரர்களுக்கு சாதகமானது. அதிக அளவில் கட்டடம் கட்டியவர்களுக்கு, அதிக அளவில் சொத்து சேர்த்தவர்கள் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.

    தமிழக அரசு வாங்கியிருக்கும் கடன்களுக்கு, ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடியை வட்டியாக கட்டி வருகிறது. மின்சாரம் மற்றும் போக்குவரத்துக் கழகம் மட்டுமே சேர்ந்து மொத்தம் ரூ.2 லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறார்கள்.

    Must Read : வெள்ளை அறிக்கை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,63,976 கடன் சுமை உள்ளது

    வரி செலுத்த வேண்டியவர்களிடம், சரியான விகிதத்தில் வரி விதிப்பு செய்து சரியான முறையில் வரியை வசூல் செய்ய வேண்டும். அதனால் சரியான நபர்களிடம், சரியான முறையில், சரியான விகிதத்தில் வரி வசூல் செய்ய வேண்டியது அரசின் திறமையை எடுத்துக் காட்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஜீரோ வரி என்பது அர்த்தமற்ற நடைமுறை. வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் தான் சாதகமாகும்.” இவ்வாறு கூறினார்.
    Published by:Suresh V
    First published: