பழனி கோவில் மூலவர் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது

news18
Updated: July 11, 2018, 11:21 AM IST
பழனி கோவில் மூலவர் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது
வின்ச் மூலமாக கொண்டு வரப்பட்ட பழனி கோவில் மூலவர் சிலை
news18
Updated: July 11, 2018, 11:21 AM IST
பழனி தண்டாயுதபாணி கோவிலில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட மூலவர் சிலை இன்று மாலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. 

பழனி கோவிலில் நவபாசாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஐம்பொன்னால் மற்றொரு மூலவர் சிலை தயாரிக்கப்பட்டது. இந்த சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் பற்றி விசாரித்த, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், முறைகேடு நடந்ததை உறுதி செய்தனர்.

இதனையடுத்து ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, அறநிலையத்துறை நகை மதிப்பீட்டாளர் தெய்வேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோவில் நிர்வாக அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்து சில ஆவணங்கள் தீக்கிரையாகின. இதனால் சிலைக்கு பாதுகாப்பு இல்லை என போலீசார் தரப்பில் கும்பகோணம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சிலையை கோவிலில் இருந்து எடுத்து வந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதற்காக, ஐம்பொன் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. சிலையின் எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கப்பட்டு மரப்பட்டியில் வைத்து 2-ஆம் எண் வின்ச் மூலமாக மலை அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலை இன்று மாலைக்குள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...