மீண்டும் வெடிக்கும் பழனி கோயில் நவபாஷாண சிலை சர்ச்சை...! விசாரணைக்குழு அமைக்கப்படுமா?

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நவபாஷாண சிலையைக் கடத்தும் முயற்சி நடந்திருப்பதாக சிலைக் கடத்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர். மேலும், நவபாஷாண சிலையைக் கடத்துவதற்காகவே ஐம்பொன் சிலை நிறுவப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 3:08 PM IST
மீண்டும் வெடிக்கும் பழனி கோயில் நவபாஷாண சிலை சர்ச்சை...! விசாரணைக்குழு அமைக்கப்படுமா?
பழனி முருகன் சிலை விவகாரம்
Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 3:08 PM IST
உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலில் உள்ள நவபாஷாண சிலை உண்மையானதுதானா? என்ற சர்ச்சை வெடித்துள்ளது. அதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலில் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் நவபாஷாண சிலை, மூலவராக உள்ளது.

இந்தச் சிலையில் அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு நோய் தீர்க்கும் சக்தி உள்ளது என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட நவபாஷாண சிலை உண்மையானதுதானா? என்பதில்தான் தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.


நவபாஷாண சிலை சிதிலம் அடைந்திருப்பதாகக் கூறி கடந்த 2004-ம் ஆண்டு புதிய ஐம்பொன் சிலை வைக்கப்பட்டது.

இதற்காக அப்போது கருவறை 20 நாட்களுக்கு மேல் மூடப்பட்டதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .

இந்த நிலையில், 20 கிலோ தங்கம் கலந்துசெய்யப்பட்ட ஐம்பொன் சிலை, 4 மாதங்களில் நிறம் மாறத்தொடங்கியது.

Loading...

இதனால், அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், ஐம்பொன் சிலையை அகற்றும்படி வலியுறுத்தினார்கள். இதனையடுத்து ஐம்பொன் சிலை அகற்றப்பட்டது.

சிலை உருவாக்கத்தில் தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த புகாரை தொடர்ந்து மாநில சிலைத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்த பொன்.மாணிக்கவேல் விசாரணையைத் தொடங்கினார்.

முறைகேடு புகாரின் அடிப்படையில் அறநிலையத் துறை ஆணையர் தனபால், இணை ஆணையர் கே.கே.ராஜா, துணை ஆணையர் தேவேந்திரன், ஸ்தபதி முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் விசாரணை ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில், பழநியில் இருப்பது உண்மையான நவபாஷாண சிலைதானா? என்ற சந்தேகம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நவபாஷாண சிலையைக் கடத்தும் முயற்சி நடந்திருப்பதாக சிலைக் கடத்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர். மேலும், நவபாஷாண சிலையைக் கடத்துவதற்காகவே ஐம்பொன் சிலை நிறுவப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் முன்னாள் திண்டுக்கல் எம்.எல்.ஏ-வுமான பாலபாரதி புதிய சந்தேகத்தை முன்வைத்துள்ளார்.

அதாவது, பழனி கோவிலில் தற்போது உள்ள மூலவர் சிலை, நவபாஷாண சிலைதானா? இல்லை, அந்தச் சிலைக் கடத்தப்பட்டு விட்டதா என்ற சந்தேகம் ஏற்கனவே இருக்கும் நிலையில், அந்தச் சிலையைக் கடத்த முயற்சி நடந்ததாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தற்போது சொல்லியிருப்பது, பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

தற்போது இருப்பது நவபாஷாண சிலைதானா என்பதை ஆய்வுசெய்து தெளிவுப் படுத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழுவில் அனைத்துக் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பழனி கோவிலில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அது குறித்து இப்போது வெளியில் சொல்ல முடியாது என பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.

நவபாஷாண சிலை உண்மையானதுதானா என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படுமா? உண்மை வெளிச்சத்துக்கு வருமா?என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பக்தர்களுக்குச் சோதனை வந்தால், 'முருகா' என அழைப்பார்கள். இப்போது அந்த முருகனுக்கே சோதனை வந்திருக்கிறது. இந்த சோதனையை களைய அரசு முன்வருமா?.

Also watch: செருப்பால் அடித்ததால் ஆத்திரம்.. பெண்ணை கொன்ற அத்தை மகன்

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...