பழனி மூலவர் சிலையை கடத்த திட்டம் - சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரபரப்பு தகவல்
பழனி மூலவர் சிலையை கடத்த திட்டம் - சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரபரப்பு தகவல்
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார், பழனி கோவில் ஸ்பதி முத்தையா சிலை கடத்தலுக்கு மூல காரணமாக இருந்ததாகவும், அவரை பின் நின்று இயக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

பழனி முருகன் கோவில் மூலவர் சிலையை சொந்த லாபத்திற்காக சிலர் கடத்த திட்டமிட்டதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி கோவிலில் நிறுவப்பட்ட ஐம்பொன் உற்சவர் சிலையை செய்ததில் முறைகேடு நடந்ததாக 5 பேரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அந்த சிலை தற்போது தஞ்சை நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில், 2 நாட்களாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் பழனியில் தங்கி விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் போகரால் செய்யப்பட்ட நவபாஷாண மூலவர் சிலையை, சொந்த லாபத்திற்காக சிலர் கடத்த திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதற்காகவே உற்சவர் சிலை செய்து அதனை மாற்றிவைக்க முயற்சித்ததாகவும் தெரியவந்தது. ஸ்பதி முத்தையா இதற்கு மூல காரணமாக இருந்ததாகவும், அவரை பின் நின்று இயக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க... உலகக்கோப்பை லீக் சுற்றுகளில் அதிக ரன்கள் எடுத்த டாப்-3 வீரர்கள்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.