பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பு: 9 நாட்களில் ரூ.1.68 கோடி காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பு: 9 நாட்களில் ரூ.1.68 கோடி காணிக்கை

பழனி கோவில்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 9 நாட்களில் நிரம்பிய நிலையில் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் மொத்தம் காணிக்கை வரவு ரூ.1.68 கோடியை தாண்டியது.

  • Share this:
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் தைபொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த ஒன்பது நாட்களில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடர்ந்து, புதன்கிழமை  திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ஒன்பது நாள் பக்தர்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூபாய் 1.68 கோடியே 73,450 கிடைத்துள்ளது.

உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 639 கிராமும், வெள்ளி 20,600 கிராமும் கிடைத்தது.

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 43 ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க...சசிகலாவை பார்க்க அனுமதி மறுப்பு- ஜெய் ஆனந்த் குற்றச்சாட்டு

நிகழ்ச்சியில் பழனிக்கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, மதுரை மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் செல்வி, பழனிக்கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: