பேருந்து ஓட்டும்போது வாட்ஸ் அப்பில் மூழ்கிய ஓட்டுநர்... வீடியோ எடுத்து வைரலாக்கிய பயணிகள்!

பழனியில் செல்போனை பார்த்தபடி தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்து ஓட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. பயணிகள் கண்டித்தும் ஓட்டுனர் ராமகிருஷ்ணன் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

பேருந்து ஓட்டும்போது வாட்ஸ் அப்பில் மூழ்கிய ஓட்டுநர்... வீடியோ எடுத்து வைரலாக்கிய பயணிகள்!
ஓட்டுநர்
  • Share this:
பழனியில் செல்போனை பார்த்தபடி தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்து ஓட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறை செல்லக்கூடிய தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ராமகிருஷ்ணன், செல்போனை பார்த்த படி பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

ஓட்டுநரின் அலட்சியமான செயல்களால் அச்சம் அடைந்த பயணிகள் ஓட்டுநரை கண்டித்துள்ளனர். பயணிகள் கண்டித்தும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் ராமகிருஷ்ணன் கையில் ஆண்ட்ராய்ட் செல்போனை வைத்துக்கொண்டு போஸ்புக், வாட்ஸ்ஆப் பார்த்தபடி பேருந்தை தொடர்ந்து ஓட்டியுள்ளார்.


இசை மழையில் நனையத் தயாரா? பாட்டு பாடி அசத்தும் நாய் - வைரல் வீடியோ

இந்நிலையில் ஓட்டுநரின் செயலை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தவீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பயணிகளின் உயிரை பற்றிய கவலையில்லாமல் பேருந்தை அஜாக்கரதையாக இயக்கிய ஓட்டுநர் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.Also see:


 
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading