Madurai Palamedu Jallikattu 2020 Live | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலை

Palamedu Jallikattu 2020 Live | மதுரையில் நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலை

  • News18 Tamil
  • | January 16, 2020, 10:37 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    15:21 (IST)
    17:34 (IST)

    சிறந்த மாடு பிடி வீரருக்கான 3-ம் பரிசு  10 மாடுகளைப் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் என்பவருக்கு வழங்கப்பட்டது.

    17:34 (IST)

    சிறந்த மாடு பிடி வீரருக்கான இரண்டாம்  பரிசு 13 காளைகளை அடக்கிய அய்யப்பநாயக்கன்பட்டி ராஜா என்பவருக்கு வழங்கப்பட்டது.

    17:19 (IST)

    பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. 16 காளைகளைப் பிடித்து பிரபாகர் என்பவர் சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 

    17:17 (IST)

    பாலமேடு ஜல்லிக்கட்டில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மாடு வாடிவாசல் களம் கண்டு சென்றது. 

    16:3 (IST)

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான நேரம் நீட்டிப்பு

    பாலமேடு ஜல்லிகட்டு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை  4 மணிக்கு நிறைவடையும். தற்போது அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டு 4:30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:22 (IST)

    பாலமேடு  ஜல்லிகட்டு போட்டியில் ராஜா , பிரபாகர் என்ற இரண்டு வீரர்கள் தலா 13 மாடுகள் பிடித்து சம நிலையில் உள்ளனர் .

    11:38 (IST)

    பாலமேடு ஜல்லிக்கட்டில் 3வது முடிவடைந்து 4வது சுற்று தொடங்கி உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று நடைபெற்று வருகிறது.

    8:53 (IST)
    8:13 (IST)

    பாலமேடு ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் தொடங்கியது

    முதல் காளையாக கோயில் காளை அவிழ்க்கப்பட்டது

    மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி கோலகலமாக நடைபெற்று வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து பார்த்து வருகின்றனர்.

    ஜல்லிக்ட்டு போட்டியில் வெற்றி பெறும் காளை மற்றும் காளையர்களுக்கு , தங்ககாசு, வெள்ளி காசு, பைக் , சைக்கிள், அண்டா , குக்கர் , மின் விசிறி, கட்டில், பட்டு சேலை, பீரோ உள்ளிட்ட பரிசு பொருட்கள் பரிசாக வழங்கப்படும்.
    இறுதியில் முதல் பரிசாக கார் வழங்கப்பட உள்ளது .

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில், மாவட்ட ஆட்சியர் வினய், தென்மண்டல காவல் துறை ஐஜி சண்முக ராஜேஸ்வரன்,
    மாவட்ட S.P. மணிவண்ணன், தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.