முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாலமேடு ஜல்லிக்கட்டு... மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய வீரர் உயிரிழப்பு

பாலமேடு ஜல்லிக்கட்டு... மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய வீரர் உயிரிழப்பு

மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன்

மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன்

பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய வீரர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

பாலமேடு ஜல்லிக்கட்டில்  9 காளைகளை அடக்கிய வீரர் அரவிந்த் ராஜன் மாடு முட்டியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு சுற்றிலும் காளையை அடக்குவதில் வீரர்கள் ஆர்வம் காட்டினர். அதுபோலவே பாலமேட்டைச் சேர்ந்த அரவிந்த் ராஜ், காளைகளை போட்டி போட்டுக்கொண்டு அடக்கி வந்தார். ஒரு கட்டத்தில் 9 காளைகளை தழுவி 3ம் இடத்திலிருந்தார்.

இந்த நிலையில் களத்தில் இருந்த ஒரு காளையை தழுவ முயற்சித்தபோது, காளை குத்தியதில் அரவிந்த் ராஜுக்கு வலது பக்க வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

Palamedu Jallikattu Live: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர் உயிரிழப்பு

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அரவிந்த் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Jallikattu, Madurai