முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Tamil Nadu Election 2021: மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா... தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிப்பு

Tamil Nadu Election 2021: மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா... தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிப்பு

பழ.கருப்பையா

பழ.கருப்பையா

மார்ச் 7-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா. சட்டமன்ற தேர்தலில் மநீம வேட்பாளராக தேர்தலை சந்திப்பார் என கமல் அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், பழ.கருப்பையாவை, நேர்மையாளர்களின் கூடாரத்திற்கு வரவேற்கிறேன் என்றார்.

சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மநீம-வுடன் இணைந்து தேர்தல் களம் காண இருப்பதாகவும், மார்ச் 1 முதல் என் தலைமையில் வேட்பாளர் தேர்வுக்குழு கலந்தாய்வில் ஈடுபடும் எனவும் தெரிவித்தார்.

மநீம வேட்பாளர் தேர்வுகுழு உறுப்பினர்களாக கமல்ஹாசன், பழ.கருப்பையா, பொன்ராஜ், ரங்கராஜன், செந்தில் ஆறுமுகம், சுரேஷ் ஆகியோர் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 7-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த கமல், மார்ச் 3 முதல் தான் அடுத்தகட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.  மேலும், மக்கள் நீதி மய்யத்தில் முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன்தான் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

Must Read: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார் சரத்குமார்

top videos

    மாற்றம் நிகழப் போகிறது என்றும், மூன்றாவது அணி அமைய இருப்பதாகவும், வெற்றி பெறுவோம் எனவும் கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த மூன்றாவது அணி மகல்ஹாசன் தலைமையிலான அணியாக இருக்கும் என கருதப்படுகின்றது.

    First published:

    Tags: Kamal Haasan, Makkal Needhi Maiam, TN Assembly Election 2021