பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் யாசீர் ஷா பெயர், 14 வயது சிறுமிஅளித்த பாலியல் பலாத்கார புகாரில் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாலிமார் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர்-ல் சேர்க்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது யாசீர் ஷாவுக்கு நேரடியாக தொடர்பு கிடையாது, ஆனால் யாசீர் ஷாவின் நண்பர் ஃபர்ஹான் என்பவர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயது பெண் அளித்த புகாரில் தெரிவித்ததோடு, இதற்கு கிரிக்கெட் வீரர் யாசீர் ஷா துணை புரிந்தார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
மேலும், அதை வீடியோ எடுத்து வெளியே பரப்பி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார் ஃபர்ஹான். இது தொடர்பாக அந்தச் சிறுமி கிரிக்கெட் வீரர் யாசீர் ஷாவிடம் வாட்ஸ் அப் செயலி மூலம் தெரியப்படுத்தியுள்ளார். ஆனால், “யாசீர் ஷா என்னை ஏளனமாகப் பேசி சிறுமிகளை அவருக்குப் பிடிக்கும் என்றார்” என்று அந்தச் சிறுமி கூறியதாக எஃப்.ஐ.ஆர்.-ல் பதிவாகியுள்ளது.
மேலும் இது தொடர்பாக புகார் அது இது என்று போனால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று யாசீர் ஷா மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
“தான் மிகவும் செல்வாக்கு உள்ளவர் என்றும் உயர் அதிகாரிகள் தன் பாக்கெட்டில் என்றும் யாசீர் ஷா கூறினார். யாசீர் ஷாவும் அவரது நண்பர் ஃபர்ஹானும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுப்பவர்கள்” என்று சிறுமி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலீஸுக்கு செல்வேன் என்று சிறுமி கூறியதும் யாசீர் ஷா, அந்தச் சிறுமியிடம் ஃபிளாட் ஒன்று வாங்கித்தருவதாகவும் அடுத்த 18 ஆண்டுகளுக்கு சிறுமியின் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும் ஆசை காட்டியுள்ளார். இதுவும் முதல் தகவலறிக்கையில் பதிவாகியுள்ளது.
Also Read: Ashes 2021-22| இவ்வளவு மோசமான கேப்டனா ஜோ ரூட்!- இங்கிலாந்து ஊடகங்கள் செம கிண்டல்
பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசீர் ஷா 2014-ல் சர்வதேச கிரிக்கெட்டில் 46 டெஸ்ட்டில் 235 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் சதம் ஒன்றையும் அடித்துள்ளார். இந்தச் சதம் 2019 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.