முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் மரணம் - பாகிஸ்தானில் துக்கம் அனுசரிப்பு.. அரைக்கம்பத்தில் பறக்கும் கொடிகள்!

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் மரணம் - பாகிஸ்தானில் துக்கம் அனுசரிப்பு.. அரைக்கம்பத்தில் பறக்கும் கொடிகள்!

கடந்த ஆண்டு, பாகிஸ்தான் அரசு கிலானிக்கு நாட்டின் மிக உயர்ந்த சிவில் மரியாதையான நிஷான்-இ-பாகிஸ்தானை வழங்கியது

கடந்த ஆண்டு, பாகிஸ்தான் அரசு கிலானிக்கு நாட்டின் மிக உயர்ந்த சிவில் மரியாதையான நிஷான்-இ-பாகிஸ்தானை வழங்கியது

கடந்த ஆண்டு, பாகிஸ்தான் அரசு கிலானிக்கு நாட்டின் மிக உயர்ந்த சிவில் மரியாதையான நிஷான்-இ-பாகிஸ்தானை வழங்கியது

 • 1-MIN READ
 • Last Updated :

  காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களில் முதன்மையானவராக பார்க்கப்படும் சையது அலி ஷா கிலானி காலமானார். அவருக்கு வயது 92.

  கிலானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கிலானி மறைவினால் பாகிஸ்தானில் ஒரு நாள் அடையாள துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

  இம்ரான் கான் இரங்கல்:

  ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் சையது அலி ஷா கிலானி. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாத முகமாக அறியப்படுபவர்.. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த கிலானி நேற்று (செப் 1) அவருடைய இல்லத்தில் காலமானார். பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டையும், இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளையும் கொண்டிருந்த கிலானியின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஷா மகமூத் குரோஷி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, “தன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடியவர், காஷ்மீர் சுதந்திர போராட்ட வீரர் கிலானி மறைவால் துயரமடைந்துள்ளேன்.

  Also Read: சாமியார் பேச்சைக்கேட்டு மனைவியை நிர்வாணப்படுத்தி பூஜை.. சிக்கிய கணவர் குடும்பத்தினர்..

  ஆக்கிரமிப்பு இந்திய அரசால் சிறைவாசம் மற்றும் சித்திரவதை அனுபவித்தார், ஆனாலும் உறுதியாக இருந்தார். அவரது தைரியமான போராட்டத்திற்கு நாங்கள் இங்கு பாகிஸ்தானில் வணக்கம் செலுத்துகிறோம். பாகிஸ்தான் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்போம்” என தெரிவித்திருக்கிறார் இம்ரான் கான்.

  யார் இந்த கிலானி?

  பல மத மற்றும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஹூரியத் மாநாடு என்ற பெயரிலான அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தார். 2003ல் அந்த அமைப்பில் இருந்து விலகி ஹூரியத் (கிலானி) என்ற அமைப்பை நிறுவினார். கடந்த ஆண்டு அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார். அதன் தலைமைப் பொறுப்பை முகமது அஷ்ரஃப் செஹ்ராய் என்பவரிடம் வழங்கினார். அவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மரணம் அடைந்தார்.

  ஆரம்ப காலத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு 15 ஆண்டுகாலம் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். பின்னர் இந்த கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

  Also Read:  எங்கிட்ட சொல்லாம பானிபூரி வாங்கலாமா? – மனைவி செய்த பகீர் சம்பவம்!

  கிலானி மறைவுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி இரங்கல் தெரிவித்துள்ளார். நாங்கள் பெரும்பாலான விஷயங்களில் ஒருமித்த கருத்துடையவர்கள் இல்லை என்ற போதிலும் அவர் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

  கடந்த ஆண்டு, பாகிஸ்தான் அரசு கிலானிக்கு நாட்டின் மிக உயர்ந்த சிவில் மரியாதையான நிஷான்-இ-பாகிஸ்தானை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  First published: