ஆப்கன் ராணுவத்தின் மீது அதிகாரம் செலுத்தும் வகையில் காய் நகர்த்தி வரும் பாகிஸ்தான், ஆப்கனில் அமையவிருக்கும் புதிய அரசில் ஹக்கானி தீவிரவாத அமைப்பினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்வதற்காக மஸ்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவரை காபுலுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானை பலவந்தமாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு ஈரான் பாணியில் புதிய அரசை அமைப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். ஒரு சில காரணங்களுக்காக தாலிபான்களின் புதிய அரசு அமைவது தாமதாகி வருகிறது.
இந்நிலையில் ஆப்கன் நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் பாகிஸ்தான், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவர் ஹமீது ஃபயஸை, காபுலுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. தாலிபானின் ஆட்சியில் ஹக்கானிகளை இடம்பெறச்செய்வதன் மூலம் பாகிஸ்தானை பிரநிதிப்படுத்த முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.
ஹக்கானிகளை சேர்த்துக் கொள்வதில் தாலிபான்களுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படும் நிலையில், தாலிபான்களின் நம்பர் - 2 நிலையில் இருக்கும் கமாண்டர்களான முல்லா யாக்கூப், முல்லா அப்துல் கனி பரதர் சகோதரர்களுக்கும், ஹக்கானி நெட்வொர்கிற்கும் பாலமாக இருந்து பேச்சு நடத்தி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு புதிய அரசியில் இடம்பெற்றுத்தர வேண்டும் என்பதே பாகிஸ்தானின் பக்கா பிளானாகும்.
Also Read: காஷ்மீர் விவகாரத்தில் அந்தர் திடீர் பல்டி அடித்த தாலிபான்கள்!
பாகிஸ்தானின் கைப்பாவை ஹக்கானி நெட்வொர்க்:
ஹக்கானி தீவிரவாத அமைப்பினர் பாகிஸ்தான் மண்ணில் உருவாக்கி வளர்த்து எடுக்கப்பட்டவர்கள். ஹக்கானிகளுக்கு ஆப்கானில் ராணுவ பலத்தை பெற்றுத்தருவதே பாகிஸ்தானின் நரித்தந்திரம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் தாலிபான்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்பதால் நேரில் சந்தித்து பேச்சு நடத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே ஹமீது ஃபயஸ் காபுலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Pakistan ISI chief Faiz Hameed arrives in #Kabul with a list of ministers sworn into the new #Islamic #Taliban regime in #Afghanistan, which proves that #Pakistan supports #terrorists and is a terrorist country. pic.twitter.com/XwYxpWtv7w
— Jasleen kaur (@Jasleen_Kaur11) September 4, 2021
தங்களுக்கு நெருக்கமான ஹக்கானி நெட்வொர்க் அமைப்பினருக்கு ஆப்கன் அரசில் பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டால், அவர்கள் மூலமாக பல காரியங்களை செய்து கொள்ள முடியும் எனவும் மறைமுகமான ஆதிக்கத்தை செலுத்த முடியும் என பாகிஸ்தான் நம்புவதாக கூறப்படுகிறது.
Also Read: ரயிலில் ஜட்டியுடன் வாக்கிங் சென்ற எம்.எல்.ஏ – பயணிகள் அதிர்ச்சி!
ஹக்கானி - ஐஎஸ்ஐ ரகசிய தொடர்பு:
பாகிஸ்தானில் தாலிபான்களுக்கு தலைமையகம் கூட இருந்தது, அந்த சமயம் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தாலிபான்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். தாலிபான்களுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக ராணுவ உதவியை வழங்கி வந்ததாக அப்போதைய ஆப்கன் அரசும், அமெரிக்க அரசும் பல முறை கூறி வந்தனர், ஆனால் இதனை வழக்கம் போலவே பாகிஸ்தான் மறுத்தது.
ஏற்கனவே புதிய அரசு அமைப்பது இன்று, நாளை என தேதி மாற்றப்பட்டு தாமதமாகி வரும் நிலையில் புதிய அரசு அமைய எப்படியும் அடுத்த வாரத்தின் மத்தி ஆகலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: பஞ்ஷிர் போராளிகளிடம் செம அடி வாங்கிய தாலிபான்கள்.. நூற்றுக்கணக்கில் பலி என தகவல்!
இதற்கிடையே தீவிரவாத அமைப்புகளின் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு மறைமுகமாக அமெரிக்க அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக சில ஆதாரங்கள் அடிப்படையில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி பின்னர், ஐஎஸ்ஐஎஸ் கோர்சான், அல் கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.