Home /News /tamil-nadu /

கீழடியில் நாட்டியம் ஆடி, பெருமை கூறி மகிழ்ந்த பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்

கீழடியில் நாட்டியம் ஆடி, பெருமை கூறி மகிழ்ந்த பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்

நர்த்தகி நடராஜ்

நர்த்தகி நடராஜ்

கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கீழடி தொல்லியல் பகுதியில் பரத நாட்டியம் ஆடி கீழடியின் பெருமையை எடுத்துக் கூறினார் திருநங்கை பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்.

    சிவகங்கை‌ மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழடியில் தமிழர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக 6 கட்டப் பணிகள் மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக நடந்து முடிந்துள்ளன. இதுவரை இதில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    தற்போது கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டவரும், திருநங்கையும், உலகபுகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞருமான பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜர், கீழடி தொல்லியல் பகுதியை பார்வையிட வந்தார்.



    பார்வையிட்ட பிறகு கீழடியில் நாட்டியம் ஆடி, நாட்டியத்தின் மூலம் கீழடியின் பெருமைகளை அழகாக எடுத்துக் கூறினார். கீழடி பற்றி அவர் கூறுகையில், கீழடி உலக வரலாற்றில் மனிதர்கள் வரலாற்றையும் நாகரிகத்தையும் கீழடி மாற்றி எழுதப் போகிறது.

    Must Read : “மதுரை மக்களின் அன்பும், உணவும் மாறா மணமுடையவை!” : மனம் திறந்த பிரபல தேசாந்திரிகள்

    நான் இங்கு பார்வையிட வந்த பொழுது எனக்கு, தெளிவாக இங்கே உள்ள ஆய்வாளர்கள் எடுத்துக் கூறியாதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனவும் கூறினார்.

    நர்த்தகி நடராஜ்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உலக வரைபடத்தில் கீழடி மாற்ற முடியாத ஒரு இடமாக இருக்கும் என்றும், தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துக்கூறும் என்றும் தெரிவித்தார். மேலும், இங்கு வந்து பார்த்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Keeladi

    அடுத்த செய்தி