கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற 214-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள பத்மராஜன்!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற 214-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள பத்மராஜன்!
பத்மராஜன்
  • News18
  • Last Updated: March 6, 2020, 1:23 PM IST
  • Share this:
அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வேட்புமனு தாக்கல் செய்யும் பத்மராஜன் தற்போது 214-வது முறையாக தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் தலா 3 இடங்களில் போட்டியிட உள்ள நிலையில், இரு கட்சிகளும் ஓரிரு நாளில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 10,000 ரூபாய் டெபாசிட் தொகையும், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன் மொழிவும் அவசியம். இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வேட்புமனு தாக்கல் செய்யும் இவர் தற்போது 214-வது முறையாக தாக்கல் செய்துள்ளார். தனக்கு வெற்றி முக்கியமல்ல தோல்வியே முக்கியம் என்று தெரிவித்த அவர், லிம்கா புத்தகத்தில் 3 முறை இடம்பிடித்து உள்ளதாகவும், கின்னஸ் புத்தகத்தில் விரைவில் இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

Also see...
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading