• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ’களப்பணி தொடரும்... நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்’- மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல்

’களப்பணி தொடரும்... நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்’- மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல்

பத்ம ப்ரியா

பத்ம ப்ரியா

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன் என பத்ம ப்ரியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டவருமான பத்ம பிரியா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தலுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்த விலகி வரும் சூழலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான பத்ம பிரியா  தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    மதுரவாயல் தொகுதில் போட்டியிட்ட பத்ம பிரியா 33401 வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தார்.  தற்போது அவர் சொந்தக் காரணங்களுக்காக கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: உங்களுக்கு கொரோனா பாசிடிவா..? வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறீர்களா..? விரைவில் குணமடைய நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..!

    ட்விட்டரில் பத்ம பிரியா “அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

    சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும். ” எனப் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: