• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி... தி.மு.கவில் இணைந்தது குறித்து பத்ம பிரியா விளக்கம்

பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி... தி.மு.கவில் இணைந்தது குறித்து பத்ம பிரியா விளக்கம்

பத்ம பிரியா

பத்ம பிரியா

தி.மு.கவில் இணைந்தது குறித்து பத்ம பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
    யூட்யூப் பிரபலமாக இருந்தவர் பத்ம பிரியா. அவர், 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து வீடியோ ஒன்றை அவரது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ யாரும் எதிர்பாராத வகையில் யூட்யூப்பில் ட்ரெண்டானது. லட்சக்கணக்கானோர் அந்த வீடியோ பார்த்து பகிர்ந்தனர். அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு பரவியது.

    அதனையடுத்து, பா.ஜ.கவினர் பத்ம பிரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தார். பா.ஜ.க எதிர்ப்புகளுக்கு பயந்து அந்த வீடியோ அவரது யூட்யூப் பக்கத்திலிருந்து நீக்கினார். அந்த வீடியோ மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட நபராக மாறினார் பத்மபிரியா. அதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாநில சுற்றுச் சூழல் அணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 34,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.

    தேர்தலுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்த விலகிய சூழலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான பத்ம பிரியா கட்சியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்தார். இந்தநிலையில், நேற்று தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார். தற்போது தி.மு.கவில் இணைந்தது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த ட்விட்டர் பதிவில், ‘அரசியல் என்பது பெரும் கடல். இதுவரை ஏட்டுப்பாடத்தில் படித்ததையே நம்பிய நான், அனுபவப் பாடம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி, திராவிட அரசியலின் மாண்பையும், முக்கியத்துவத்தையும் இப்போதுதான் உணர்கிறேன். அதன்படி, மக்கள் பணி செய்ய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மருத்துவர் மகேந்திரன் வழிகாட்டுதலின்படி கழகத்தில் இணைத்துக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: