சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் படுதோல்வி - அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் படுதோல்வி அடைந்திருப்பதாக அதிமுக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் படுதோல்வி - அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
  • Share this:
‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் ‘வீட்டு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும்’ திட்டத்திற்கு மாவட்ட அளவிலான ‘பேக்கேஜ்’ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பேக்கேஜ் டெண்டர் மூலம் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஊராட்சி மன்றத் தலைவர்களை அதிமுகவினர் மிரட்டி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். டெண்டரை ரத்துசெய்து நிதியை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்கே அளித்திட அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Also read: அரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி ரத்தாகுமா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்


மேலும், தமிழ்நாட்டில் 2017-18ஆம் ஆண்டுகளில் குற்றச்செயல்கள் 18.61% அதிகரித்திருப்பதாகவும், சென்னையும், கோவையும் கொலைநகரங்கள் என தேசிய குற்ற ஆவண அறிக்கையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறையை அரசியல் மயமாக்கி, அதன் கைகளைக் கட்டி ரவுடி ராஜ்ஜியத்திற்கு 'பெர்மிட்' வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி எனவும் சாடியுள்ளார்.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading