முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பேருந்து கூரை மீது பயணித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம்!

பேருந்து கூரை மீது பயணித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம்!

பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்த மாணவர்கள்

பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்த மாணவர்கள்

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மனோதத்துவ நிபுணர்களை கொண்டு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள் மொழிச்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

பேருந்து கூரை மீது பயணிக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடுமுறை முடிந்து நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. முதல்நாள் என்பதால், மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிந்த போலீஸார், சென்னையின் அனைத்து கல்லூரிகளின் முன்பாகவும் பாதுகாப்புக்காக போலீஸாரை பணியமர்த்தியிருந்தனர்.

இந்த நிலையில், காவல்துறையின் அறிவிப்பையும் மீறி சில இடங்களில் பேருந்தின் மேற்கூரைமீது ஏறி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு செல்லும் போது அவர்கள் பயிலும் கல்லூரியின் பெயரைக் கொண்ட பேனர்களை வைத்திருந்தனர்.

மாணவர்கள் பேருந்தின் மேற்கூறை மீது பயணித்த போது ஓட்டுனர் திடீரென ப்ரேக் பிடிக்க மேற்கூறை மீது அமர்ந்திருந்த மாணவர்கள் கீழே விழுந்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களை போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

இந்நிலையில் பேருந்து கூரைமீது பயணம் போன்ற ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மனோதத்துவ நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள் மொழிச்செல்வன் கூறியுள்ளார்.

Also see...

top videos

    First published:

    Tags: Bus day, College student, Pachayappa's college