நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள் எங்களது கட்சிக்கு வாக்களியுங்கள் - பாரிவேந்தர்

நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள் எங்களது கட்சிக்கு வாக்களியுங்கள் - பாரிவேந்தர்

பாரிவேந்தர்

நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள் எங்களது கட்சிக்கு வாக்களியுங்கள், நாங்கள் 60 ஆண்டுகள் கல்வித் துறையில் சிறப்பாக சேவையாற்றி வருகிறோம் என்றும் நாங்கள் தொடர்ந்து சேவை செய்ய எங்களது அணிக்கு வாக்களியுங்கள் எனவும் கூறி மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

 • Share this:

  சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் ஐஜேகே சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அமுதாவை ஆதரித்து, பனமரத்துப்பட்டி பகுதியில் பாரிவேந்தர் பிரச்சாரம் செய்தார். அப்போது, “தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என சந்தேகம் ஏற்படும். நன்றாக யோசித்து வாக்களியுங்கள். நாங்கள் பெண்களுக்கு மரியாதை தந்து, பெண்களை மதிக்க தெரிந்து பெண்களை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். வீரபாண்டி தொகுதியில் ஐஜேகே தவிர அனைத்து வேட்பாளர்களும் ஆண்கள்தான்.

  இந்த தேர்தலில் யார் நல்லவர்கள், நேர்மையானவர்கள், ஆளத் தெரிந்தவர்கள் என புரிந்து வாக்களிக்க வேண்டும். கெட்டவர்களையும், லஞ்சம் வாங்குவோரையும் இந்த தேர்வில் ஒதுக்க வேண்டும். சிலர் நோட்டாவுக்கு வாக்களிப்பார்கள். அப்படி நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள் எங்களது கட்சிக்கு வாக்களியுங்கள் நாங்கள் 60 ஆண்டுகள் கல்வித் துறையில் சிறப்பாக சேவையாற்றி வருகிறோம்.

  உலகம் முழுவதும் எங்களுக்கு பெயர் இருக்கிறது. புகழும் இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து சேவை செய்ய எங்களது அணிக்கு வாக்களியுங்கள். நாங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம். அரசியல் கட்சி தலைவர்கள் என்றால் உண்மையானவராக இருக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை உள்ளவராக இருக்க வேண்டும். எங்களது கட்சி தலைவர்களிடம் இவை அனைத்தும் இருக்கிறது.

  தேர்தல் ஆணையத்தில் பலர் சொத்து மதிப்பு குறைவாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் உலக நாயகன் கமல்ஹாசன் அவரது சொத்து மதிப்பு ரூபாய் 177 கோடி என காண்பித்துள்ளார். பொதுமக்கள் வாக்களிக்கும் முன்பாக யார் உண்மையானவர்கள் என பார்த்து வாக்களியுங்கள். எங்களது கூட்டணி நேர்மையான கூட்டணி. உண்மையான கூட்டணி.

  Must Read :  எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன், முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன் - ஆ.ராசா

  வெளிப்படைத் தன்மையுள்ள கட்சி. எங்களது கூட்டணி தான் முதன்மையான கூட்டணி. நல்லாட்சி வர எங்கள் அணிக்கு வாக்களியுங்கள். ” இவ்வாறு கூறி பிரச்சாரம் செய்தார் பாரிவேந்தர்.
  Published by:Suresh V
  First published: