பாம்புகளை ’ட்ரீட்’ பண்ணுவதில் இவர் ஸ்டைலே வேற... மக்களே புகழும் ”பாம்பு பாண்டியன்”

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாம்பு பாண்டியனோ, தனது சுற்றுவட்டாரப்பகுதிகளில் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை மிக லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டு வருகிறார்.

Web Desk | news18
Updated: July 6, 2019, 11:34 AM IST
பாம்புகளை ’ட்ரீட்’ பண்ணுவதில் இவர் ஸ்டைலே வேற... மக்களே புகழும் ”பாம்பு பாண்டியன்”
பாம்பு பாண்டியன்
Web Desk | news18
Updated: July 6, 2019, 11:34 AM IST
பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் பாண்டியன், பாம்புகள் பலமுறை கடித்தும் அவற்றை மீட்டுத்தருவதை சேவையாக செய்து வருவதாகவும், அரசு தனது மகனுக்கு வனத்துறையில் வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டியனை, அப்பகுதி மக்கள் பாம்பு பாண்டியன் என்றே அழைக்கின்றனர்.

இதுவரை 5,000 மேற்பட்ட கொடிய விஷம் கொண்ட பாம்புகளைப் பிடித்துள்ள பாண்டியன், அவற்றை வனப்பகுதிகளில் விட்டுவிடுவார்.

ஒரு முறை நல்லபாம்பு கடித்து 9 நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாக கூறும் பாண்டியன், பாம்புகள் மீது தனக்கு எவ்வாறு ஆர்வம் வந்தது எனக் கூறுகையில்,                      “ சிறு வயதில், ஒரு நாள் நான் பாம்பை பார்த்து மயங்கி விழுந்து விட்டேன், அதனால் 3 நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையிலே இருந்தேன்.

பின்பு, பாம்புக்கு ஏன் நாம் பயப்படவேண்டும், என மன தைரியத்தோடு பாம்பு இருக்கும் இடத்தை நோக்கி நானே சென்று, அதனுடன் விளையாடிவிட்டு, பாம்பு வாழுமிடத்திலேயே விட்டு வந்துடுவேன்.

நான் 8-ம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே நல்லபடியாக பாம்புகளை பிடிக்க கத்துக்கொண்டேன்.

பாம்பை என் கண்ணில் பட்டாலே, அதனை பிடிக்காமல் இருக்க மாட்டேன், எனது ஊர்க்காரர்களும் என்னை பாம்பு பிடிக்க கூப்பிட்டாலும், உடனே சென்று விடுவேன்.

பாம்புகளை பிடிப்பதால், எனக்கோ, அந்த பாம்புக்கோ எந்த பாதிப்பும் வராத அளவுக்கு நடந்து கொள்வேன். காடுகள் அழிவதாலே அது குடியிருப்புகள் நோக்கி வருகிறது. பாம்புகள் பூமியின் சமநிலையை பாதுகாக்கும் தோழன்” எனக்கூறும் பாண்டியன், கல்லூரியில் பயின்றுவரும் தனது மகனுக்கும் பாம்பு பிடிக்க கற்றுக் கொடுத்தும் வருகிறார்.

சுற்றுவட்டாரப்பகுதியின் வீடுகள், தோட்டங்களில் புகுந்து அச்சுறுத்தும் பாம்புகளை பிடிக்கும் பாண்டியன், அவை காயத்துடன் இருந்தால் மருந்திட்டு குணப்படுத்துகிறார்.

தற்போது பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் பாண்டியன், பாம்புகள் பலமுறை கடித்தும் அவற்றை மீட்டுத்தருவதை சேவையாக செய்து வருவதாகவும், அரசு தனது மகனுக்கு வனத்துறையில் வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

- சீர்காழி செய்தியாளர் பிரசன்னா வெங்கடேசன்

Also watch: அரசு மருத்துவமனையில் நிர்வாண நிலையில் குடிநீர் கேட்டு கதறிய நோயாளி! கண்கலங்க வைத்த காட்சி

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...