முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “தமிழ்நாட்டு மக்கள் மத, சாதி உணர்வுக்கு எதிரானவர்களா?”- பா.ரஞ்சித் கேள்வி!

“தமிழ்நாட்டு மக்கள் மத, சாதி உணர்வுக்கு எதிரானவர்களா?”- பா.ரஞ்சித் கேள்வி!

பா. ரஞ்சித்

பா. ரஞ்சித்

சாதி எதிர்ப்பால் அரசியல் மாற்றத்தைக் கண்ட தமிழ்நாடு, இன்னும் சமூக மாற்றத்தைக் கண்டடையவில்லை - பா.ரஞ்சித்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சேலத்தில் கோயில் கருவறைக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரை திமுக நிர்வாகி தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், பெரியார், அண்ணா ஆகியோர் முன்வைத்த பிராமண மற்றும் சாதி எதிர்ப்பால் அரசியல் மாற்றத்தைக் கண்ட தமிழ்நாடு, இன்னும் சமூக மாற்றத்தைக் கண்டடையாமல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, ஒரு பக்கம் பட்டியலின மக்களுக்குக் கோயில் திறப்பு, மற்றொரு பக்கம் பட்டியலின இளைஞர் கோயிலுக்கு நுழைவது பெரும் குற்றம் எனத் தீண்டாமை கொடுமைகள் தொடர்வதாகவும், திமுக ஆட்சியில் சமூக அநீதி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் "உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மத சாதி உணர்வுக்கு எதிரானவர்களா? மதமும் சாதியும் சமூக தளத்தில் வேறு வேறா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

First published:

Tags: DMK, Pa. ranjith, Threatened a Dalit