• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • EXCLUSIVE: மத்தியில் பாஜக அரசு மாறினால் தமிழக அரசு கலைந்துவிடும்: ப.சிதம்பரம்!

EXCLUSIVE: மத்தியில் பாஜக அரசு மாறினால் தமிழக அரசு கலைந்துவிடும்: ப.சிதம்பரம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முதன்மை ஆசிரியர் குணசேகரன்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முதன்மை ஆசிரியர் குணசேகரன்

தேசிய பாதுகாப்பு குறித்தும் தேசப்பற்று குறித்தும் காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கற்றுக் கொடுக்கும் நிலையில் பாஜக இல்லை என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் குணசேகரன் நடத்திய வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக-வின் தயவால்தான் அதிமுக அரசு நடப்பதாகவும், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது அந்தக் கூட்டணிக்கே மைனஸ் எனவும் குறிப்பிட்டார்.

    மேலும், தேமுதிக, பாமக பலவீனமாகிவிட்ட அமைப்புகள். அதிமுக கூட்டணி தேர்தல் தப்பு கணக்கு போட்டுள்ளது என்றும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் கைபாவை அரசு அதிமுக அரசு என்று கூறியதுடன்பாஜக கொடுக்கும் தைரியத்தால் தான் அரசே நடக்கிறது என்றும், அதிமுக இருப்பதே பாஜக போட்ட பிச்சை  என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    மேலும், பாஜக ஆட்சி மாறினால் அதிமுக அரசு கலகலத்துவிடும் என்றும், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் மாற்றம் வரும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    தொடர்ந்து நமது ஆசிரியர் குணசேகரன் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ப.சிதம்பரம் தற்போது பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள அதிமுக எம்ஜிஆர் கண்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இல்லை என்றும் இது ஜெயலலிதா கண்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் இல்லை என்று விமர்சித்தார்.

    அதிமுக இரண்டாக உடைந்துள்ளது என்று கூறிய ப.சிதம்பரம், ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் அது உறுதியாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

    மேலும், தேசிய பாதுகாப்பு குறித்தும் தேசப்பற்று குறித்தும் காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கற்றுக் கொடுக்கும் நிலையில் பாஜக இல்லை என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: