Home /News /tamil-nadu /

270 அமாவாசை வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக முடியாது - ப.சிதம்பரம் பேச்சு

270 அமாவாசை வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக முடியாது - ப.சிதம்பரம் பேச்சு

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

P. Chidambaram : 2024-ல் சட்டமன்ற தேர்தல் வரும் என்றும் 27 அமாவாசையில் தேர்தல் வரும் எனவும் பேசுகின்றனர். 27 அமாவாசை வந்தாலும் தேர்தல் வராது. 270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி முதலமைச்சராக முடியாது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.  இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி செயப்படுத்தப்படும் என்றும், தேர்தல் பிரசார கூட்டத்தில் நின்று கொண்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பேசுகின்றனர். அவர்கள் தேவையில்லாமல் பிதற்றலாக பேசக் கூடாது என்றும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம், சட்டமன்றத்தை முடக்குவோம் என்று கூறுகின்றனர். சட்டசபையை யாராலும் முடக்க முடியாது. அரசியல் சாசனப்படி அது முடியாது. நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. 2024-ல் சட்டமன்ற தேர்தல் வரும் என்றும் 27 அமாவாசையில் தேர்தல் வரும் என பேசுகின்றனர். 27 அமாவாசை வந்தாலும் தேர்தல் வராது. 270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி முதலமைச்சராக முடியாது என்று கூறினார்.

    Must Read : 27 அமாவாசைல ஆட்சி முடிஞ்சுரும்னு 2 அமாவாசைகள் சொல்றாங்க - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

    மேலும், உள்ளாட்சியில் இரண்டு லட்சம் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய பணிகளை ஒரு அமைச்சரால் பார்க்க முடியாது என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற திமுக உறுப்பினர் மாங்குடி, முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Local Body Election 2022, P.chidambaram

    அடுத்த செய்தி