பாஜக வெற்றி பெற்றால் தமிழ் மீது இந்தி, சனாதனதர்மம் திணிக்கப்படும் - ப.சிதம்பரம்

பாஜக வெற்றி பெற்றால் தமிழ் மீது இந்தி, சனாதனதர்மம் திணிக்கப்படும் - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

தென் நாட்டில் காங்கிரஸின் தவறான உத்திகளால் பாஜக கைக்கு கர்நாடகம் சென்று விட்டது...

 • Share this:
  பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்றால் தமிழ் மீது இந்தியும், சனாதனதர்மமும் திணிக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

  காரைக்குடியில் ப.சிதம்பரம் பேசுகையில், “தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தல் அகில இந்திய அளவிலும், இங்கு உள்ள கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தல். பாஜக தமிழ் நாட்டில் வெல்லக் கூடாது. வெற்றி பெற்றால் காங்கிரஸ் இடத்தை பாஜக தமிழகத்தில் பிடித்து விடும். இடத்தை விட்டு விடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.

  அதிமுக தமிழ்நாட்டில சில இடங்களில் வெற்றி பெறும், அதிமுக தமிழகத்தில் பலமாகத்தான் இருகிறது. அதிமுக வெற்றி பெறவே பெறாது என்று கூற முடியாது. தென் நாட்டில் காங்கிரஸின் தவறான உத்திகளால் பாஜக கைக்கு கர்நாடகம் சென்று விட்டது.

  நான் பாஜகவை பார்த்து அச்சம் கொள்ளவில்லை. கேரளாவில் மக்களிடையே, முதலமைச்சர் பினராயி விஜயன் மீது தவறான குற்றச்சாட்டை கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறது பாஜக.

  பாஜகவிடம் சரணடைந்தால் நல்வர்கள், எதிர்த்தால் அயோக்கியர்களா? பாஜக ஆட்சியில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமலேயே, எதிர்பவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. ஹிந்தியில் எம்.பிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. வெங்கடேசன் எம்.பி அதை திரும்பி அனுப்பினார். நான் கிழித்து, அதை கவரில் வைத்து திருப்பி அனுப்பினேன்.

  பாஜக வெற்றி பெற்றால் தமிழ் மீது இந்தி, சனாதனதர்மம் திணிக்கப்படும். என்னை கூறு போட்டாலும் இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். திமுக கூட்டணியில் இருந்தால்தான் பாஜகவை எதிர்க்க முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் அழிவிலிருந்து பாதுகாக்க இந்த தேர்தல் மிக முக்கியமானது. பாஜக எதிர்ப்பில் மம்தாபானர்ஜியின் துணிவை பாராட்டுகிறேன்.

  தலையாட்டி பொம்மை பரிசு கொடுத்தவருக்கும் சந்தோஷம், வாங்கியவருக்கும் சந்தோஷம். யார் வேண்டுமானாலும் முதல்வராக வரட்டும். ஆனால், அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர்கள் முதல்வராக வரக்கூடாது.

  தேசிய முகம் உள்ள கட்சி காங்கிரஸ் மட்டும்தான். மத ஒற்றுமையை நிலைநாட்ட பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டின் குரல் திமுக. அதேபோல, இந்திய நாட்டின் குரல் காங்கிரஸ்.

  Must Read :  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? - வைகோ பதில்

   

  நான் எளிய தொண்டனாக தேர்தலில பணியாற்ற இருக்கிறேன். தபால் ஓட்டில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது அணியில் நம்பிக்கை கிடையாது” இவ்வாறு கூறினார்.
  Published by:Suresh V
  First published: