• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 25 ஆண்டு சரித்திர சாதனை திரும்ப இருக்கிறது... தமிழ் மொழி, தமிழினத்திற்கு முழு விரோதி பாஜக - ப.சிதம்பரம்

25 ஆண்டு சரித்திர சாதனை திரும்ப இருக்கிறது... தமிழ் மொழி, தமிழினத்திற்கு முழு விரோதி பாஜக - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

இந்தி தெரிந்தால்தான் பேச முடியும் என்ற நிலமையை உருவாக்குகிறார்கள், தமிழ் மீது இந்தி அமரபோகிறதா?...

  • Share this:
    25 ஆண்டு சரித்திர சாதனை திரும்ப இருக்கிறது என்றும் தமிழ் மொழி, தமிழினத்திற்கு முழு விரோதி பாஜகதான் எனவும் காரைக்குடியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து  ப.சிதம்பரம் பேசுகையில், “நான் பொதுக் கூட்டங்களில் பேசி ஓராண்டு ஆகிவிட்டது இடையிலே கொரோனா  நம்மை விலக்கி வைத்து இருந்தது, ஆனால் தேர்தல் ஒற்றுமையாக்கி உள்ளது. தொற்றால் தேர்தல் நின்றுவிடவில்லை தேர்தலை கண்டாவது கொரோனா தொற்று போகுமா என்று நான் ஆசைப்படுகிறேன்’ என்று கூறி உரையைத் தொடங்கினார்.

    “நமது லட்சியம் ஆட்சி மாற்றம் தான். 1971 ல் முதன் முதலில் இந்திரா காந்தி, திமுக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது . 1996 ல் காங்கிரஸ் தலைமை கட்சியை ஜெயலலிதாவிடம் அடகுவைத்தது அதை எதிர்த்து திமுக வுடன் கூட்டணி அமைத்து மிகப் பெரிய வெற்றி அதே போல 25 ஆண்டுகளுக்கு பிறகு  காங்கிரஸ் கிடைத்த தொகுதியும் 25 அந்த  25 ஆண்டு சரித்திர சாதனையும் திரும்ப இருக்கிறது.

    தமிழக முதல்வர் நான்கு ஆண்டு காலம் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், கடைசி நேரத்தில் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுவது, மக்களை ஏமாற்றும் வேலை. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 30 நிமிடம் தாமதமாகி இருந்தால் மளிகை கடன் ரத்து, கை மாத்து கடன் ரத்து என அறிவித்திருப்பார் முதல்வர். பேசாத, எழுதாத, ஆட்சி செய்யாத மொழி அழிந்துவிடும். தமிழனனின் இனம், குணம் இவற்றின் குறியீடே மொழி தான்.

    Must Read : அசாமில் இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் - ராகுல் காந்தி வாக்குறுதி

     

    தமிழ் மொழி, தமிழினத்திற்கு முழு விரோதி மத்திய பாஜக தான், மத்திய அமைச்சரவையில் கேள்வி பதில் எல்லாம் இந்தியில்தான் பேசுகிறார்கள். இந்தி தெரிந்தால் பேச முடியும் என்ற நிலமையை உருவாக்குகிறார்கள். தமிழ் மீது இந்தி அமரபோகிறதா? இதற்கு தேர்தல் முடிவுகளின் மூலம் தக்க பாடம் புகட்டுங்கள்” இவ்வாறு கூறினார் ப.சிதம்பரம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: