திமுக கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறுவது உறுதி என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு வாக்களிப்பதால் சட்டமன்றத்திலும் நமக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணிவிட முடியாது என்றும், சரியான வியூகங்கள் அமைத்து தேர்தலில் போட்டியிட்டால் தான் வெற்றிபெறலாம் என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தைப் போன்று, மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாத காரணத்தால் தான் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று சபதம் ஏற்று பணியாற்ற வேண்டும் என்றார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையோடு செயல்பட்டால், 200 இடங்களில் வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.