முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சமஸ்கிருத சர்ச்சையில் கல்லூரி டீனை பொறுப்பாக்கக் கூடாது: ப. சிதம்பரம் ட்வீட்

சமஸ்கிருத சர்ச்சையில் கல்லூரி டீனை பொறுப்பாக்கக் கூடாது: ப. சிதம்பரம் ட்வீட்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது - ப.சிதம்பரம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மதுரை மருத்துவக்கல்லூரி விவகாரத்தில் நல்ல மருத்துவரின் சேவையை இழந்து விடக்கூடாது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மதுரை மருத்துவக்கல்லூரியில் சனிக்கிழமையன்று முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருத கருத்துக்கள் அடங்கிய உறுதிமொழியை ஏற்ற விவகாரம் தொடர்பாக டீன் ரத்தினவேலு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது.

மருத்துவக் கல்லூரி டீன் அவர்களுக்குத் தெரிவிக்காமல் மாணவர் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது.

Also read... சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் டீன் தலையீடு இல்லை : மருத்துவ கல்லூரி மாணவர்கள் விளக்கம்

டீன் டாக்டர் ரத்தனவேலு அவர்கள் கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவமனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Madurai, P.chidambaram