அ.தி.மு.க, பா.ஜ.கவின் மிருக பண பலம் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு சவால் - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

அ.தி.மு.க, பா.ஜ.கவின் மிருக பண பலத்தை எதிர்கொள்வது தி.மு.க, காங்கிரஸுக்கு சவாலான விஷயமாக இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் குறித்து பேசியதைவிட என்னை பற்றி பேசியதுதான் அதிகம். பெட்ரோல், டீசலுக்கு கலால்வரியை குறைத்து செஸ் வரியை உயர்த்தியிருக்கிறார்கள். இதனால் பெட்ரோல் விலை 90 ரூபாயை விட கூடுதலாக உள்ளது. இதற்கு நிதி அமைச்சர் பதில் சொல்லவில்லை. சிறு குறு தொழில்கள் 35% விகிதம் மூடப்பட்டன. 12 கோடி பேர் இந்த ஆண்டு வேலை இழந்துளளனர். 2 கோடியே 80 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளார்கள். இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு 228 லட்சம் கோடி. ஆனால், உற்பத்தி துறைக்கு ஒரு லட்சம் கோடி மட்டும் ஒதுக்கியிருப்பது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது. இதற்கெல்லாம் பட்ஜெட்டில் பதிலில்லை.

  மத்திய அரசின் கணக்கு எண்களில் பிழை உள்ளது. 10 லட்சம் கோடி கூடுதலாக கடன் வாங்கி உள்ளதாக கூறுகின்றனர். எதற்காக செலவழித்தீர்கள் என்றால் பதில் இல்லை. அரசு வங்கியை தனியாருக்கு தாரை வார்ப்பது நல்லதல்ல. இதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. 7 துறைமுகங்கள், 2 வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கப் போகின்றனர். தனியார் அனுமதி கேட்டால் வழங்குங்கள். அதை விடுத்து தாரை வார்ப்பது நல்லதல்ல. நீங்கள் எடுக்கும் நடவடிக்கையால் அடுத்த ஆண்டு வருவாய் மதிப்பீடு கிடைக்காது. வருவாய், செலவு மதிப்பீட்டுக்குள் அடங்காது. குறிப்பிட்ட முதலாளிகளுக்காகத்தான் இந்த அரசு செயல்படுகிறது.

  வாஜ்பாய் காலத்தில் எதிர்கட்சிகளிடம் கருத்துகளை கேட்டு செய்தனர். எதிர் கட்சிகளை எதிரி கட்சியாக பார்க்கிறார் மோடி.
  பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதை சரி செய்ய பணப்பரிமாற்றம் இருக்க வேண்டும். 25 சதவீத ஏழை மக்களுக்கு ரூ.,2000 வீதம் ஆறு மாதங்களுக்காகவது வழங்க வேண்டும். வீணாகும் உணவு தானியங்களை ரேசனில் இலவசமாக வழங்க வேண்டும்.
  தமிழகத்தில் 10 ஆண்டுகளில் முதல் 5 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சிக்கு - மைனஸ் 100 மார்க். தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு முதல்வர் அறிவிக்கும் அறிவிப்பு எல்லாம் வெறும் மத்தாப்புதான். சர்வாதிகார ஆட்சி நோக்கி மோடி அரசுபயணிக்கிறது. முழுமையாக இன்னும் மாறவில்லை. பாஜ.கவுடன் கூட்டணி வைக்கும் கட்சி தேர்தலில் தோல்வியை தான் சந்திக்கும்.

  வருகின்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ள ஒரே சவால் ஆளும் கட்சியின் மிருக பண பலம்தான். பணத்தை கொடுத்து நான் ஜெயித்து விடுவேன் என ஒரு கட்சி சொல்வது மக்களை துச்சமாக மதிக்கும் செயலுக்கு ஈடானது. சசிகலா வருகை பற்றி காங்கிரஸ் கட்சிக்கு கவலை இல்லை.

  அ.தி.மு.க இணை ஒருங்கினைப்பாளருக்கு தான் கவலை. சட்டசபைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் நடுநிலைமையோடு இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆர்.கேநகரில் பணப்பட்டுவாடா நடந்தது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. அவ்வாறு நடந்தது உண்மையானால் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சொல்ல வேண்டும் அல்லவா. குடியுரிமை சட்டம் கொடுமையான சட்டம். குடியை பறிக்கும் செயல். வருகின்ற தேர்தலில் எங்கள் கூட்டணியின் இலக்கு 234 லும் வெற்றி என்பதுதான்’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: