ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தடுப்பூசி திருவிழா என்பது மிகப்பெரிய மோசடி: ப.சிதம்பரம் விமர்சனம்

தடுப்பூசி திருவிழா என்பது மிகப்பெரிய மோசடி: ப.சிதம்பரம் விமர்சனம்

சிதம்பரம்

சிதம்பரம்

தடுப்பூசி திருவிழா என்பது மிகப்பெரிய மோசடி என்று விமர்சித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  பெருந்தொற்றை துயர நாளாகவும் துக்க நாளாகவும் தான் கடைபிடிக்க முடியும் என்று  தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தடுப்பூசி திருவிழா என்பது மிகப்பெரிய மோசடி என்று விமர்சித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  பெருந்தொற்றை துயர நாளாகவும் துக்க நாளாகவும் தான் கடைபிடிக்க முடியும் என்று  தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியுள்ளது.   தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக  தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  இந்த பணி தொடங்கவில்லை.   இந்நிலையில் கொரோனா விவகாரத்தில்  மத்திய அரசை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம்,  கொரோனாவை  கட்டுப்படுத்துவதில் மத்திய , மாநில அரசுகள் தோல்வியை சந்தித்துள்ளன எனவும்  மாநில அரசு தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியது என்றும் தெரிவித்தார்.  கொரோனா தொடர்பாக மத்திய அரசை பலமுறை தாங்கள் எச்சரித்ததாகவும் அவர் கூறினார்.

தடுப்பூசியே இல்லாமல் தடுப்பூசி இயக்கம் நடத்தப்படுவது எவ்வாறு என கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்,   இந்திய அரசு  பெருந்தொற்றை  தடுப்பதில் முழுத் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எழுப்பிய கேள்விகளை தான் தற்போது உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பதிலில்லை ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு பதில் சொல்வார்கள் என்று நம்புகிறோம்’ என  தெரிவித்தார்

தடுப்பூசி திருவிழா என்பது மிகப்பெரிய மோசடி. பெருந்தொற்று என்பது  திருவிழாவா? என கேள்வி எழுப்பியவர்,   அது ஒரு துயர , துக்க நாளாகக் தான்  கடைபிடிக்க  வேண்டும் என்று கூறினார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்திருந்தால்  ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று  பேசிய ப.சிதம்பரம்,  மாநிலங்களில்  புதிதாக பொறுப்பேற்கும்  அரசுகளுக்கு பெரும் சுவால்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona Vaccine, Election Result, P.chidambaram