”தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகள் பற்றி மட்டும் துப்பு கிடைக்கிறதா?” என முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய ராஜ்ய சபா எம்.பி-யுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் காலத்தில் அதிகப் பணப்புழக்கம் இருந்ததாகவும் இச்சூழல் தேர்தலில் பிரதிபலிக்கலாம் என்ற காரணத்தாலும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நேற்று ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு 8 மணி அளவில் தூத்துகுடியில் அத்தொகுதியின் திமுக மக்களவைத் தேர்தல் வேட்பாளர் கனிமொழியின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேர சோதனைக்குப் பின் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கனிமொழி தெரிவித்திருந்தார். இதுகுறித்து ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், “வருமான வரித் துறை கார்த்தி சிதம்பரத்தின் மீது கொடுத்த புகார் சட்ட விரோதமானது, செல்லாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் வருமான வரித்துறை மேல் முறையீடு செய்திருக்கிறது. அவ்வளவுதான். இந்த மேல்முறையீட்டில் கார்த்தியின் வழக்கறிஞர்கள் பதில் சொல்வார்கள்.
திருமதி கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை. எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது?! 2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பார்க்க:
நியாயமாக பார்த்தால் தேனியில் தான் தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.