Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வு..!

தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வு..!

ராஜ்ய சபா

ராஜ்ய சபா

திமுக, அதிமுக. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆறு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அறிவித்தார்

    தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக , காங்கிரஸ், அதிமுக கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. தமிழகத்தில் காலியாகும் ஆறு இடங்களையும் சேர்த்து மொத்தம் 57 இடங்களுக்கு வரும் 10ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இவர்களை தவிர 7 சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், சுயேச்சைகளுக்கு எம்.எல்.ஏக்கள் யாரும் முன்மொழியாததால் அவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில் திமுக, அதிமுக. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆறு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அறிவித்தார்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Chidambaram, Congress, DMK, Rajya sabha MP, Tamil News, Tamilnadu

    அடுத்த செய்தி