தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது இந்த நேரத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருகிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில்; அனுமதி கோரியது.
இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய கடந்த ஏப்ரல் 27ம் தேதி நீதிமன்றம் அனுமதியளித்தது. தொடர்ந்து ஆலையில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு மே 13ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. தொடங்கிய நான்கு தினங்களிலே மே 17ம் தேதி பழுதானது. பழுது சரி செய்யப்பட்டு தொடர்ந்து உற்பத்தி நடந்து வந்தது. நீதிமன்றம் அளித்த காலக்கெடு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்றே ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்தம் செய்தது.
கொரோனா மூன்றாவது அறையை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 6 மாதம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் ஆலை தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டதில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
Also Read : கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்தம் செய்தது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைவிடுத்துள்ள செய்திக்குறிப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 2132 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் 32 மாவட்டங்களுக்கு மருத்துவத் தேவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்டெர்லைட் கைவசம் 134 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 6ஆம் தேதி நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதியளித்தால் உடனடியாக உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜன் ஆலையை பராமரிக்க செய்ய இரண்டு மெகாவாட் மின்சாரம் தேவை என்றும் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.