• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருமண மண்டபங்களைத் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்குமாறு கோரிக்கை

திருமண மண்டபங்களைத் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்குமாறு கோரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உணவகங்கள் 50% இருக்கைகளுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது போல் திருமண மண்டபங்களுக்கும் தளர்வு அளிக்கவேண்டும் அனைத்து திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
    கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் ஒரு லட்சம் திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 3,500 மண்டப உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். தற்போது சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என தமிழக அரசு தெரிவித்ததால் மண்டபங்களை முன்பதிவு செய்ய பொது மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    மண்டபங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் இதனை நம்பி வாழும் சுமார் 15 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்படுள்ளதாகவும் வருமானம் இல்லாததால் வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பி செலுத்த முடியவில்லை எனவும் உரிமையாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

    Also read: ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாடி தோற்ற இளைஞர் மனமுடைந்து தற்கொலை

    ஆவணி மாதத்தில் அதிக சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால் திருமண மண்டபத்தை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மண்டபத்திற்கு ஏற்றவாறு நபர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கட்டுப்பாடுகளை தளர்த்தி திருமண மண்டபங்களை திறக்க அரசு அனுமதித்தால் மட்டுமே இத்தொழிலை நம்பி உள்ள 15 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பதே நிதர்சனமான உண்மை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: