ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் கண்டறியப்பட்ட 80-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள்!

ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் கண்டறியப்பட்ட 80-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள்!

பள்ளிக்காரனையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதத்தில் தான் புலம் பெயரும் பறவைகள் வருகை தரும்

  • Share this:
கொரோனா நோய்தொற்று காலகட்டத்தில் போடப்பட்ட ஊரடங்கு மக்களை பெரும்பாலும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி கட்டாயப்படுத்தியது. ஆனால் அது பறவைகளுக்கு வழக்கம் போல ஒரு வாழ்க்கை தான்.

ஜூன் மாதத்தில் குறைந்தது 80 பறவை இனங்கள் மற்றும் ஜூலை மாதத்தில் சுமார் 83 பறவை இனங்கள் பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்பு பகுதியில் காணப்பட்டுள்ளதாக தமிழக வனத்துறை தகவல் அளித்துள்ளது.   சென்னை மாநகரத்தின் கடைசி மீதமுள்ள ஈர நிலமாக இருப்பதால் இது புலம்பெயர்ந்த பறவைகளை ஈர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளது. சதுப்பு நிலப்பகுதியான இது சுமார் 8,300 பறவைகளின் தாயகமாகும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பருவகாலங்களில் இங்கு கிரேட்டர் ஃபிளமிங்கோ பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இடம் பெயருகின்றன. ஆகவே பல்லுயிர் நிறைந்த இப்பகுதி குளிர்காலத்தில் பார்வையாளர்களை ஈர்க்கிறது. பொதுவாக பள்ளிக்காரனையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதத்தில் தான் புலம் பெயரும் பறவைகள் வருகை தரும். பர்பில் ஸ்வாம்பேன், காமன் மூர்ஹென், ஃபெசண்ட்-டெயில்ட் ஜகானா, பர்பில் ஹெரான், பிளாக்-விங்கட் ஸ்டில்ட், காமன் கூட், இந்தியன் ஸ்பாட்-பில்ட் டக், ஸ்பாட்-பில்ட் பெலிகன் மற்றும் பைட் கிங்பிஷர் போன்ற பறவைகள் இதில் அடங்கும்.

மேலும், கொரோனா நோய் தோற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கின் போது சேலம் பறவையியல் அறக்கட்டளையின் (SOF) உறுப்பினர்கள் மேற்கு தமிழ்நாட்டில் 81 உள்ளூர் பறவை இனங்களை கண்டுள்ளதாக பதிவு செய்துள்ளனர். சேலத்தில் காணப்பட்ட பறவைகளில் ஆசிய கோயல், கால்நடை எக்ரெட், ரெட்-வென்ட் புல்பூல், காமன் மைனா மற்றும் மஞ்சள் பில்ட் பாப்லர் ஆகியவை அடங்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒலி மாசு, தொழில்துறை மற்றும் பிற மனித நடவடிக்கைகள் கடுமையாக குறைந்து வருவதால் "பறவைகளின் சத்தம்  நம் காதுகளை நிரப்புகிறது" என்று வனவிலங்கு ஆர்வலர் கே. மோகன் ராஜ் தெரிவித்தார்.  ஊரடங்கால் பறவைகள் திடீரென தோன்றியுள்ளன என்று அர்த்தம் அல்ல. நகரங்களிலும், கிராமங்களிலும் காணப்படும் அனைத்து பறவைகளும் எப்போதும் இருக்கின்றன.ஆனால் நம் வேகமான வாழ்க்கையின் காரணமாக அவற்றைப் பார்க்கத் தவறிவிட்டோம் என்று அவர் கூறினார். மனிதர்களாகிய நாம் நம் கண்களையும், காதுகளையும் விழிப்புடன் வைத்திருந்தால் சாதாரண நாட்களில் வசிக்கும் பறவைகளை நாம் கண்டிருப்போம் என்று பறவை கண்காணிப்பாளரான என். சுப்பிரமணியம் கூறினார்.
Published by:Vijay R
First published: