பொங்கலுக்காக 5.12 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக கடந்த 11-ம் தேதி முதலே சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொங்கலுக்காக 5.12 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம்!
சொந்த ஊர் செல்லும் மக்கள் (கோயம்பேடு பேருந்து நிலையம்)
  • News18
  • Last Updated: January 7, 2020, 10:08 AM IST
  • Share this:
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகள் மூலம் 5 லட்சம் பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக கடந்த 11-ம் தேதி முதலே சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட 3,023 சிறப்புப் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 1.45 லட்சம் பேரும், சனிக்கிழமை இரவு 3,764 பேருந்துகள் மூலம் 1.98 லட்சம் பேரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.


இதைத் தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து நேற்று 3,120 பேருந்துகளில் 1.68 லட்சம் பேர் பயணம் செய்தனர்.

பொங்கலுக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கம் துவங்கியது முதல் இதுவரையில் 5.12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Also see...
First published: January 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading