பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் ஆட்டு சந்தையில் சூடுபிடிக்கும் விற்பனை!

பக்ரீத் பண்டிக்கை காரணமாக ஆடுகளின் தேவை அதிகமாகவும், வரத்து குறைவாகவும் இருப்பதால் பலருக்கு ஆடு கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

news18
Updated: August 8, 2019, 5:59 PM IST
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் ஆட்டு சந்தையில் சூடுபிடிக்கும் விற்பனை!
ஆட்டுச் சந்தை
news18
Updated: August 8, 2019, 5:59 PM IST
திண்டுக்கல் அய்யலூர் ஆட்டு சந்தையில் பக்ரீத் மற்றும் ஆடிமாதம் என்பதால் 30,000 மேற்பட்ட ஆடுகள் விற்றுத் தீர்ந்தன.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழன் கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறும். இங்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

கடந்த சில வாரங்களாக வறட்சி காரணமாக ஆடுகளின் விலை அதிகரித்தது. இதனால் 10,000 ஆடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த வாரம் பக்ரீத் வரவுள்ளதால் 30 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆடுகளை வாங்க வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டதால் வழக்கமாக 10,000 முதல் 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் ஆடுகள் இந்த வாரம் 20,000 ரூபாய் வரை விற்பனையாகின.Loading...

பக்ரீத் பண்டிக்கை காரணமாக ஆடுகளின் தேவை அதிகமாகவும், வரத்து குறைவாகவும் இருப்பதால் பலருக்கு ஆடு கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும்,  இதுவரை 2 கோடி மதிப்புள்ள ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Also see...

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...