சேலத்தில் ஸ்வீட் கடையின் குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்!

ஆய்வின் போது கடையின் குடோனில் 4,50,000 மதிப்பிலான 3 டன் பிளாஸ்டிக் பைகளை வைத்திருப்பது தெரியவந்ததையடுத்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து தனியார்  லாலா ஸ்விட் கடையின் உரிமையாளருக்கு 2,50,000 ரூபாய் அபாரதமும் விதித்தார்.

சேலத்தில் ஸ்வீட் கடையின் குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்!
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
  • News18
  • Last Updated: October 19, 2019, 5:39 PM IST
  • Share this:
சேலத்தில் நெல்லை லாலா ஸ்வீட் கடையின் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 3,000 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்ததை அடுத்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையிலான குழுவினர் ராஜ கணபதி கோவில் அருகிலுள்ள தனியார் லாலா ஸ்விட் கடை குடோனில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது கடையின் குடோனில் 4,50,000 மதிப்பிலான 3 டன் பிளாஸ்டிக் பைகளை வைத்திருப்பது தெரியவந்ததையடுத்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து தனியார்  லாலா ஸ்விட் கடையின் உரிமையாளருக்கு 2,50,000 ரூபாய் அபாரதமும் விதித்தார்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மீண்டும் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய சேலம் மாநகரத்தில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பயன்படுவத்துவது தெரிந்தால் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆய்வுகள் சேலம் மாநகர பகுதிகள் முழுவதும் நடைபெறும் எனவும் இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Also see...

Loading...

First published: October 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...