திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
காலவரையற்ற வேலை நிறுத்த எச்சரிக்கை
  • Share this:
மத்திய தொழிற் சங்கங்கள், பாதுகாப்புத் துறை சம்மேளனங்களின் அறிவிப்பின்படி,திருச்சி படைக்கலத் தொழிற்சாலை (OFT) அனைத்து தொழிற்சங்கங்களின் கண்டன ஆர்ப்பாட்டம் OFT நுழைவாயில் முன்பாக இன்று காலை நடைபெற்றது.

பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி OFT தொழிலாளர் சங்கம், தேசிய தொழிலாள சங்கம்,  பிபிஎம்எஸ், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், அம்பேத்கர் தொழிற்சங்கம் ஆகிய  6 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்க கூட்டியக்கத்தினர் தனி நபர் இடைவெளியுடன் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading